Latest News

ஜி.வி.பிரகாஷ்:"நாச்சியார்" படத்தால் கிடைத்த வெற்றி...

Tags: Bala    Jyothika    Naachiyaar    G. V. Prakash Kumar   
Slug: Gv prakash the success of the movie nachiyar

பாலா இயக்கிய "நாச்சியார்" படம் வெற்றியை தொடர்ந்து இரண்டு விதமான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதை செயற்கை கதை என்றும்,ஆகச் சிறந்தத் திரைப்படம் என சிலர் குறி வருகின்றனர். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் அவர் " திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் என்ற அடையாளத்தை கொடுத்து ஆக்கமும், ஊக்கமும் கொடுத்த அனைவர்க்கும், மற்றும் நாச்சியார் படத்திற்கு அமோக  ஆதரவு அளித்து நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றி என்றும், இந்த படத்தை விமர்சகர்களிடமும், மக்களிடமும்,திரையுலக பிரமுகர்களிடமும் எனக்கு நல்ல பெயர் பெற்று தந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த படத்திற்காக என்னை அணுகிய போது இசையமைக்கத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். பாலா சார் "நீ தான் நடிக்கிற " என்று சொன்ன போது எனக்கு கிடைத்த சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த படத்தை பார்த்த  அனைவரும் "நல்ல நடிகன்"  என்று கூறினார்கள். இதற்கு பாலா சாருக்கும், ஜோதிகா மேடம், இவானா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இதில் இளையராஜா சாருடைய இசையில் நடித்தது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என ஒவ்வொருவருமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைத்தது என கூறியுள்ளார். இந்த படத்தில் ஜோதிகா உதவி கமிஷனர் ஆக திமிர் பிடித்த பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அதிலும் துணை கமிஷனரை போடி என அவர் சொல்லிவிட்டு செல்லும் காட்சியில்  தியேட்டர்களில் கைதட்டல் பிளக்கிறது.

sub news
Posted By
sumithra

Tuesday, February 20, 2018

Other Latest News

 Tuesday, February 20, 2018

சரத்குமார் நடிக்கும் "பாம்பன்" படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் எஸ்.கே.புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கிறார். இந்த படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்க ஒ ...

Varalakshmi, Sarathkumar, Pamban, venkateshan twitter

Read More


 Monday, February 19, 2018

நடிகர் ஆர்யா கேரளாவை சேர்ந்தவர். இவர் "அறிந்தும் அறியாமலும்" படத்தில் அறிமுகமாகி நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை என 40 படங்கள் நடித்துள்ளார். ...

Arya , Santhana Devan, Color's tamil

Read More


 Friday, February 16, 2018

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்தார். இதனை தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமி, ஷ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா ஆகியவர்க ...

Karthick Naren, Arvind Swami, Shriya Saran, athmika

Read More


 Thursday, February 15, 2018

ரங்கம்மாள் பாட்டி தமிழ் படங்களில் பாட்டியாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று அதில் வரும் ரூ.500 கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர் மெரினா கடற்கரையில் பிச்சை எடுப்பதாக சி ...

ranganmal, Bindu Kaushik, Nadigar, Marina Beach

Read More


 Thursday, February 15, 2018

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ஆன்மிகத்தில் மூழ்கி நேற்று முன்தினம் ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட, மகா சிவராத்திரி பூஜையில ...

, Hindi , Tamil, thamana, aanmigam, Isha Yoga Center

Read More


Top