Latest News

களவாணி 2 படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை!

Tags: Kalavani 2   
Slug: Supreme court bans kalavani 2

இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம்  2010-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இப்படத்தை ஜூலை 5ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் களவாணி 2 படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

sub news
Posted By
anis

Wednesday, July 3, 2019

Other Latest News

 Wednesday, July 3, 2019

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து பின் தயாரிப்பு வேலைகளையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ...


 Wednesday, July 3, 2019

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜெனிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் வனிதா ஆனந்தராஜ் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2012ம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்தனர். இவர்களது மகள் ஜெனிதா, தனது தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வருகிறார். மகள் ஜெனிதாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத் ...


 Wednesday, July 3, 2019

‘பாபநாசம்’ படத்தை எடுத்து பிரபலமான மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், ஜோதிகா, நிகிலா விமல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்க பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியை இப்போது ஒப்பந்தம் செய்துள்ளனர். சவுகார் ஜானகி 2014-ல் திரைக்கு வந்த வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்க ...


 Tuesday, July 2, 2019

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் வடசென்னை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் டேனியல் பாலாஜி நடித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு இயக்குனராக ஆசை இருப்பதாக டேனியல் பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்காக பல கதைகள் எழுதி வ ...


 Tuesday, July 2, 2019

தமிழ் நிலத்துக்கு வெளியே தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தவன் ராஜராஜ சோழன். அவன் காலத்தோடு அவனைப் புரிந்துகொள்வதுதான் ராஜராஜ சோழனுக்குப் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தீபம் ஏற்ற வருகிறார்கள் மக்கள். அவர்களிடம் ராஜராஜன், 'தீபம் ஏற்ற வேண்டுமென்றால் நெய் வேண்டும். அந்த நெய்யை நீங்கள் கொடுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக 100, 200 என ஆடுகளைக் கொடுங்கள். உங்கள் விளக்கு எர ...


Top