Latest News

வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு - தெலுங்கானா போலீஸ் அதிரடி

Tags: Vanitha vijayakumar   
Slug: Vanitha likely to be arrested at any time telangana police action

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜெனிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் வனிதா ஆனந்தராஜ் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2012ம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்தனர். இவர்களது மகள் ஜெனிதா, தனது தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வருகிறார். மகள் ஜெனிதாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வனிதா தற்போது தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் 'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதற்காக அவர் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் உள்ளார். அவரை கைது செய்ய உதவுமாறு நசரத்பேட்டை போலீசாரிடம் தெலங்கானா போலீசார் உதவியை கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வனிதா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பிக்பாஸ் வீடு இருக்கும் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

sub news
Posted By
anis

Wednesday, July 3, 2019

Other Latest News

 Wednesday, July 3, 2019

‘பாபநாசம்’ படத்தை எடுத்து பிரபலமான மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், ஜோதிகா, நிகிலா விமல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்க பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியை இப்போது ஒப்பந்தம் செய்துள்ளனர். சவுகார் ஜானகி 2014-ல் திரைக்கு வந்த வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்க ...


 Tuesday, July 2, 2019

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் வடசென்னை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் டேனியல் பாலாஜி நடித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு இயக்குனராக ஆசை இருப்பதாக டேனியல் பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்காக பல கதைகள் எழுதி வ ...


 Tuesday, July 2, 2019

தமிழ் நிலத்துக்கு வெளியே தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தவன் ராஜராஜ சோழன். அவன் காலத்தோடு அவனைப் புரிந்துகொள்வதுதான் ராஜராஜ சோழனுக்குப் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தீபம் ஏற்ற வருகிறார்கள் மக்கள். அவர்களிடம் ராஜராஜன், 'தீபம் ஏற்ற வேண்டுமென்றால் நெய் வேண்டும். அந்த நெய்யை நீங்கள் கொடுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக 100, 200 என ஆடுகளைக் கொடுங்கள். உங்கள் விளக்கு எர ...


 Tuesday, July 2, 2019

தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கியுள்ளார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் ...


 Tuesday, July 2, 2019

காதல் கொண்டேன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்கள் செல்வராகவன் - தனுஷ். தொடர்ந்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த இவர்கள் எப்போது மீண்டும் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. செல்வராகவன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் தனுஷை நாயகனாக வைத்து செல்வராகவன் படம் இயக்க இருப்பத ...


Top