MOVIE REVIEW

Jackson Durai Review

Cast Crew

Actor : Sathyaraj , Sibiraj

Actress : Bindu Madhavi

Director : Dharani Dharan

Producer : M. S. Sharavanan

Story Writer :

Music Director : Siddharth Vipin

Cinematography : Yuvraj

கடந்த ஆண்டு வெளியான ‘பர்மா’ படத்தின் இயக்குனர் தரணீதரனின் இரண்டாவது படம் ‘ஜாக்சன் துரை’. இப்போது தமிழில் அதிகமாக வந்துகொண்டிருக்கும் ஹாரர்-காமடி வகையில் மற்றுமொரு படம் என்றாலும் சத்யராஜ் முதல் முறையாகப் பேயாக நடித்திருக்கிறார். ஆனால் அண்மையில் வந்த ஹாரர்-காமடி படங்களில் ஒரு காட்சிகூட திகிலூட்டாமல் இருப்பதும், நகைச்சுவைக் காட்சிகள் சிலவற்றுக்கு மட்டுமே சிரிப்பு வருவதும் இந்தப் படத்தில்தான். அயன்புரம் என்ற கிராமத்தில் இருக்கும் பெரிய பங்களாவில் இருக்கும் ஜாக்சன் என்ற பேய் மக்களை ஆட்டிப்படைப்பதாக போலீஸுக்கு புகார் வருகிறது. பிரச்சனையைக் களைய சென்னையிலிருந்து அங்கு அனுப்பபடுகிறார். எஸ்.ஐ சக்தி (சிபிராஜ்). அந்த கிராமத் தலைவரின் மகள் விஜி (பிந்து மாதவி) மீது காதல் வயப்படுகிறான் சக்தி. அவளது முறைப் பையன் வீரா (கருணாகரன்) போட்டிக்கு வருகிறான், பேய் பங்களாவில் ஏழு நாட்கள் தங்கி உயிருடன் தப்பி வருபவர் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கிறார் கிராமத் தலைவர் (சண்முக சுந்தரம்). சவாலை ஏற்று பங்களாவுக்குச் செல்லும் சக்தியும் வீராவும் பேய்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள். ஆங்கிலேயேக் கொடுங்கோலன் ஜாக்சன், அவனது படை வீரர்கள் அந்த பங்களாவில் இருந்தவர்கள். அவர்களை எதிர்க்கும் துரை (சத்யராஜ்) தலைமையிலான புரட்சிப் படை தங்களை உயிரைத் தியாகம் செய்து ஜாக்சனையும் கொல்கின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு ஆவிகளாக அலைகின்றனர். சக்தியும் வீராவும் ’நல்ல’ ஆவிகள் (புரட்சிப் படையினர்) கெட்ட ஆவிகளை வீழ்த்த உதவி உயிர் தப்பிப்பதுதான் மீதிக் கதை. படத்தில் திகில் காட்சிகள் ஒன்றுகூட பயத்தை வரவைக்கவில்லை. இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தை கதையில் இணைத்திருப்பதில் புத்திசாலித்தனம் இருந்தாலும் அதுவும் முழுதாகப் பயன்படுத்தப்படவில்லை. காமடிக் காட்சிகள் மட்டுமே ஓரளவு தேறுகின்றன. குறிப்பாக கருணாகரன் பேய்களிடம் நடந்துகொள்ளும் விதம், கடைசி இருபது நிமிடக் காட்சிகள் ஆகியவை சில இடங்களில் ரசித்துச் சிரிக்க வைக்கின்றன. தொடக்கத்தில் பங்களாவில் இருப்பது பேய்கள் அல்ல அது ஒரு ஏமாற்று வேலை என்று யோசிக்கவைக்கும் வசனங்களும் காட்சிகளும் வருகின்றன. அந்தக் கோணத்தில் இன்னும் கொன்ஞ்சம் நீட்டித்து இறுதியில் ஏதாவது ஷாக் கொடுத்திருந்தால் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என​ எதிர்பார்கப்படுகிறது. சுதந்திரப் போராட்டம், வெள்ளைக்கார எதிர்ப்பு ஆகிய காட்சிகளும் சரியான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன. சிபிராஜ் பாத்திரத்துக்கு ஏற்ற நகைச்சுவ கலந்த நாயக நடிப்பை சரியாக வழங்கியிருக்கிறார். பிந்து மாதவிக்கு மொத்தமாக 5-6 காட்சிகளிலும் ஒரு பாடலிலும் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கருணாகரணின் நகைச்சுவைக்கு நன்கு பயன்பட்டிருக்கிறார். சித்தார்த் விபின் இசையமைத்த ஒரே ஒரு டூயட் பாடல்தான் படத்தில் இடம்பெறுகிறது. அதுவும் மனதில் தங்கவில்லை. சின்னாவின் பின்னணி இசை சில இடங்களில் சிறப்பு சில இடங்களில் இரைச்சல். யுவராஜின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. இரவுக் காட்சிகளில் திகிலைக் கூட்ட தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். விவேக் ஹர்ஷனின் கச்சிதமான படத்தொகுப்பு நம் பொறுமை அதிகம் சோதிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றுகிறது. மொத்தத்தில் ’ஜாக்சன் துரை’ திகில், நகைச்சுவை என இரண்டு அம்சங்களில் ரசிகர்களை ஏமாற்றுகிறது.

movie review
Posted By
Powerstar Prasath

Friday, July 15, 2016

Rating :

Other Movie Reviews

review

 Friday, July 15, 2016

இயக்குனர் பிரபு சாலமன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவருடன் நடிகர் தனுஷும் இணைந்திருப்பதால் ‘தொடரி’ படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் கதை என்று கூறப ...

Read More


review

 Friday, July 15, 2016

அரிமா நம்பி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஆனந்த சங்கர்,இவரது இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் உடன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘இரு முகன்’. விக்ரம் முதல் முறையாக இரட்டை ...

Read More


review

 Friday, July 15, 2016

கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் பி.எஸ்.ராமநாத் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திருநாள்.‛ஈ படத்திற்கு பின் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜீவா - நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து ...

Read More


Top