MOVIE

Amma kanakku

movie

Cast Crew

Actor : Samuthira kani

Actress : Amala Paul

Director : Ashwini Iyer Tiwari

Producer : Dhanush

Story Writer :

Music Director : Ilaiya raaja

Cinematography : Gavemic U Ary

Watch Trailer View Wallpapers

சைதாப்பேட்டையில் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வரும் அமலாபாலுக்கு 10-வது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். தனது மகளை வயிற்றில் சுமக்கும்போதே தனது கணவனை இழந்துவிடுகிறார் அமலாபால். அப்பா இல்லாத மகளை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வரும் அமலாபால், டாக்டரான ரேவதியின் வீட்டில் வேலை செய்து வருகிறார்.அங்கு வேலை முடிந்ததும் மாலை நேரத்தில் மாவுக் கடையிலும், மீன் கடையிலும் வேலை செய்து சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில், பத்தாவது படிக்கும் தனது மகளுக்கு கணக்கு பாடம் சரியாக வராது என்பதால் அவளை அவளுக்கு டியூசனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார் அமலாபால். ஆனால், மகளோ தனது அம்மா வீட்டு வேலை செய்வதால் தானும் வீட்டு வேலைக்கு செல்லவேண்டியதுதான் இருக்கும் என்று நினைத்து படிப்பில் அக்கறை செலுத்தாமலும், எந்தவித கனவு இல்லாமலும் இருந்து வருகிறாள். இதனால் தனது மகளின் எதிர்காலத்தை எண்ணி பயப்படும் அமலாபால், அவள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக எடுக்கும் துணிச்சலான முயற்சிதான் ‘அம்மா கணக்கு’. அமலாபால் திருமணத்திற்கு பிறகு ஹீரோயின் என்ற அந்தஸ்தை உடைத்து ஒரு 10-வது படிக்கும் மகளின் தாயாக துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அமலாபாலின் மகளாக வரும் சிறுமிக்கு முதல் படம் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து எதார்த்தம் கலந்த சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாள். தலைமையாசிரியராக வரும் சமுத்திரகனி, 2020-க்கு பிறகு உலகில் அதிநவீனமாக தயாரித்து வெளியிட்ட ரோபோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். டாக்டராக வரும் ரேவதி நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் வந்தாலும், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். பள்ளியில் சக மாணவர்களாக வரும் சிறுவர்கள் அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். இந்தியில் வெற்றிபெற்ற ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் ரீமேக்தான் ‘அம்மா கணக்கு’. இந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரியே தமிழிலும் இயக்கியிருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் பெற்றோர்கள் முனைப்புடன் செயல்பட்டால் தங்களுடைய குழந்தையை எந்த உயர்ந்த நிலைக்கும் அழைத்து செல்ல முடியும் என்பதை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.

movie
Posted By
Nihi

Saturday, June 25, 2016

Other Movies

  Friday, February 7, 2020

மாயவரத்தில் தொலைக்காட்சி சேனல் நடத்தி வரும் ஜீவாவுக்கும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும் பகை ஏற்படுகிறது. இதனால், ஆத்திரமடையும் எம்.எல்.ஏ, ஜீவாவை கொல்ல சென்னை வியாசர்பாடியின் பெரிய ரவுடியான வருணை மாயவரத்தி ...

Read More


  Friday, February 7, 2020

சரத்குமார், ராதிகா, விக்ரம்‌ பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் வானம் கொட்டட்டும். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக மணிரத்னம் தயாரித்துள்ள‌ இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். க ...

Read More


  Saturday, January 25, 2020

கோவையில் பார்வையற்றவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதே ஊரில் பெண்கள் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது சைக்கோ கொலையாளியின் கைவரிசையா ...

Read More


  Friday, January 17, 2020

அசுரன் படத்தில் சிவசாமியாக கலக்கிய தனுஷ், திரவியப்பெருமான் மற்றும் சக்தி என இரண்டு வேடங்களில் நடித்துள்ள பட்டாஸ் படம் எப்படியிருக்கு என்று இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.தனுஷ் கடைசியாக அசுரன் படத்தில் ...

Read More


Top