Warning: Undefined array key 0 in /home/networ37/kollywoodtalkies.com/wp-content/themes/kollywood/single.php on line 7

Warning: Attempt to read property "cat_name" on null in /home/networ37/kollywoodtalkies.com/wp-content/themes/kollywood/single.php on line 7

Kavan

இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் மக்கள் திலகம் விஜய் சேதுபதி,மடோனா செபாஸ்டியன் மற்றும் டி ராஜேந்தர் துணை கொண்டு திரை மறைவில் தொலைக்காட்சிகளின் அதிர்ச்சியூட்டும் செயல்பாடுகளை அப்பட்டமாக​ வெளிக்காட்டியுள்ளார். திலக் (விஜய் சேதுபதி ) ஒரு ஊடக மாணவர். தன்னுடைய காதலி மலரை (மடோனா செபாஸ்டியன்) பிரிந்து மூன்று வருடங்கள் முடங்கி கிடந்தது பின் வேலை நேர்காணலுக்காக ஒரு தொலைக்காட்சி அலுவலகத்துக்கு செல்ல அங்கே கரடு முரடான அரசியல்வாதி தீரன் (போஸ் வெங்கட்) போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொது சேனல் அதிபர் (ஆகாஷ் தீப்) சூழ்ச்சியால் நடக்கும் கலவரத்தை செல்போனில் பதிவு செய்ய, அதுவே அவருக்கு வேலை கிடைக்க உதவுகிறது. உள்ளே இன்ப அதிர்ச்சியாக காதலி மலரும் இருக்க குஷியாகிறார். இந்நிலையில் அப்துல் (விக்ராந்த்) மற்றும் அவரது காதலி அரசியல்வாதியின் ஆலையிலிருந்து வரும் கழிவால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்களுக்காக போராட காதலி அரசியல்வாதியின் ஆட்களால் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.விஜய் சேதுபதி மற்றும் மடோனா அப்பெண்ணின் முகத்தை மறைத்துப் பேட்டி எடுத்து ஒளிபரப்புகின்றனர். பின்னர் அதே பேட்டியின் காட்சிகளை மாற்றியமைத்து சேனல் கோல்மால் செய்ய கொதித்தெழும் விஜய் சேதுபதிக்கு போஸ் வெண்கட்டை நேர்காணல் செய்யும் வாய்ப்பு அமைகிறது. பேட்டியில் சேனல் எழுதி கொடுக்கும் கேள்விகளை தவிர்த்து போஸ் வெங்கட்டின் முகத்திரையை விஜய் சேதுபதி கிழிக்க அவர் தாக்கபட்டு வேலையையும் தன் நண்பர்களுடன் இழக்கிறார்.முத்தமிழ் சேனல் நடத்தும் டி ராஜேந்தர் அடைக்கலம் கொடுக்க பின் எப்படி இந்த சாதாரண மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு கவணாக மாறி சர்வ வல்லமை பொருந்திய எதிரிகளை வீழ்த்தினார்கள் என்பதே மீதிக் கதை. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் விஜய் சேதுபதி என்றே சொல்லவேண்டும்.டி ராஜேந்தர் தன் ஒரிஜினல் பாணியிலேயே வந்து ஆடுகிறார், பாடுகிறார், அடுக்கு வசனம் பேசுகிறார், அழவும் வைக்கிறார். ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். மடோனா செபாஸ்டியன் அழகாக வந்து செல்கிறார்.போராட்டக்கார அப்துலாக விக்ராந்த் ஜொலிக்கிறார்.பாண்டியராஜன், போஸ் வெங்கட், வில்லன் ஆகாஷ் தீப் அனைவரும் குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை, தொலைக்காட்சிகள் எப்படி இயங்குகின்றன என்பதை பாமரனுக்கும் புரிய கூடிய வகையில் காட்ச்சியமைத்துள்ளார். பின் எப்படி ஒரு நடன நிகழ்ச்சியிலிருந்து நேர்காணல் வரை நாம் சின்ன திரையில் பார்க்கும் அத்தனையுமே உண்மைத்தன்மையின்றி ஒளிபரப்ப படுகின்றன என்பது அதிர்ச்சியூட்டும்படி இருக்கின்றன. ஒரு சேனல் அதிபர் நினைத்தால் ஒரு அரசியல் வாதியின் பிம்பத்தையே மாற்ற முடியும் என்ற காட்சிகள் நம் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஏன் தனி தனி சேனல்கள் வைக்க போட்டா போட்டி போடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது படம். படத்தின் கதாநாயகர்கள் வழக்கம் போல் வில்லனை எதிர்த்து பறந்து பறந்து சண்டை போடாமல் அவர்கள் பாணியிலேயே சதி செய்து வீழ்த்துவது புதுமையாக​ அமைந்துள்ளது.