Warning: Undefined array key 0 in /home/networ37/kollywoodtalkies.com/wp-content/themes/kollywood/single.php on line 7

Warning: Attempt to read property "cat_name" on null in /home/networ37/kollywoodtalkies.com/wp-content/themes/kollywood/single.php on line 7

Vaanam Kottattum

சரத்குமார், ராதிகா, விக்ரம்‌ பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் வானம் கொட்டட்டும். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக மணிரத்னம் தயாரித்துள்ள‌ இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். கொலை வழக்கில் சிறைக்கு செல்லும் சரத்குமார். அதன் பிறகு குடும்பத்தை தனியாக வளர்த்து முன்னேற்றுகிறார் ராதிகா. பின்னர்‌ சிறையிலிருந்து சரத்குமார் வெளியே வர, கொலை செய்யப்பட்டவரின் மகன் பழிவாங்கும் எண்ணத்துடன் காத்திருக்கிறார். பின்னர் நிகழ்வதே படத்தின் கதை. படத்தின் ஆகச் சிறந்த பலம் சரத்குமார் மற்றும் ராதிகாவின் நடிப்பு. நீண்ட நாட்களாக சிறையிலிருந்து வரும் தன்னை தன் பிள்ளைகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போக அதனால் அவர் கையறு நிலையில் தவிப்பதும் அவர்கள் மீதான அதீத பாசத்தில் சில விஷயங்களை செய்யப்போய், மேலும் அவர்களின் கோபத்திற்கு ஆளாவது என சரத்குமார் ஒரு வெள்ளந்தியான கிராமத்து மனிதரை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் சரத்குமார். கணவர் சிறைக்கு செல்ல, தன் பிள்ளைகளை வைராக்கியத்துடன் வளர்க்கும் தாயாக ராதிகாவின் நடிப்பில் அத்தனை முதிர்ச்சி. அவரை தவிர இந்த வேடத்தை வேறு யாராலும் அத்தனை சிறப்பாக செய்திருக்க முடியாது. பிஸ்னெஸ் செய்து சாதிக்கத் துடிக்கும் இளைஞனாக விக்ரம் பிரபு, துறுதுறு பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் என இருவரும் தங்களது வேடத்தை திறம்பட கையாண்டிருக்கிறார். நந்தா, சாந்தனு, மடோனா, பாலாஜி சக்திவேல் , மதுசூதனன் என நடிகர்களின் சரியான தேர்வும் அதனை அவர்கள் கையாண்டிருக்கும் விதமும் படத்தின் சுவாரஸியத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. சித் ஸ்ரீராம் மற்றும் கே-வின் பின்னணி இசை உணர்வுகளை பார்வையாளர்களுக்கு சரியாக கடத்தியிருக்கிறது. அறிமுக இசையமைப்பாளர் சித் ஸ்ரீராமின் பாடல்கள் நன்றாக இருந்தது. குறிப்பாக கண்ணுத் தங்கம் பாடல் வெவ்வேறு சூழ்நிலைகளில் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. ப்ரீத்தா ஜெயராமன் காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்து மிளிர்கிறார். பெற்றோர்களின் கண்மூடித்தனமான பாசம், பிள்ளைகளின் மன நிலை என இரு தரப்பின் உணர்வுகளையும் சரியாக புரியும்படி கதை எழுதியிருக்கிறார்கள் மணிரத்னம் மற்றும் தனா. நம் உணர்ச்சி வேகத்தில் செய்யும் ஒரு தவறு நம் வாழ்வை எந்த அளவுக்கு சிதைக்கும் என்ற கோர் லைனை, நடிகர்களின் சிறப்பான நடிப்பு, உணர்வுப்பூர்வமான காட்சிகளால் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனா.ஷாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் இடையே நட்பா ? காதலா ? என எளிதாக புரிந்து கொள்ளாதபடி கூறியிருப்பதும் இறுதியில் அதனை தெளிவுபடுத்தும் காட்சி உணர்வுப்பூர்வமாக இருந்தது.