Cine Bits

'கனா' படவெற்றிவிழாவில் பேசியவிவகாரம்- மன்னிப்பு கோரினார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Tags: #Ishwaryarajesh   
Slug: Actress ishwarya rajesh

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அவ்விழாவில் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, "இப்போது எல்லாம் வெற்றி பெறாத படத்துக்குக் கூட வெற்றி விழா கொண்டாடுறாங்க” என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து சத்யராஜ் பேசினார், “இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் யாருக்கெல்லாம் நன்றி சொன்னாங்களோ, அதை அப்படியே ஆமோதிக்கிறேன். அவர் இறுதியாக பேசியதைத் தவிர” என்று பேசினார். ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், “'கனா' வெற்றி விழாவில் நான் பேசியது விளையாட்டுக்காகத்தான். நான் எந்தப் படத்தையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. நான் எப்போதும் யாரையும் காயப்படுத்தியதில்லை, எல்லா படங்களும் வெற்றியடைவே பிரார்த்திக்கிறேன். ஒரு படத்தை உருவாக்கி வெற்றியடையச் செய்வது எவ்வளவு கடினம் என்பதை நான் உணர்வேன். நான் பேசியது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.” என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

sub news
Posted By
saran

Wednesday, January 9, 2019

Other Cine Bits

 Wednesday, January 9, 2019

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் தெரிந்த ஒரு உச்ச நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு 'பேட்ட' படம் திரைக்கு வரவிருக்கிறது இந்நிலையில் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிக்க ...

#rajini

Read More


 Wednesday, January 9, 2019

'மாரி' படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் சமீபத்தில் வெளியானது . பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ...

# MARRI2

Read More


 Wednesday, January 9, 2019

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்க ...

#Ajith viswasam

Read More


 Wednesday, January 9, 2019

ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வருகிற பொங்கலுக்கு வெளிவரயிருக்கின்றது. இப்படத்திற்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கிவருகின்றனர். இதற்கிடையில் 10 -ஆம் தேதி முதல் வரும் 20 -ஆம் த ...

viswasam, #petta

Read More


 Tuesday, January 8, 2019

நடிகர் ரஜினி அரசியலில் நுழைவதாக அறிவித்த பிறகு அவரது ரசிகர் மன்றக் குழுவினர் ஓவ்வொரு முக்கிய நகரங்களிலும் வாட்ஸ் ஆப் குழு துவங்கி மற்ற அரசியல் கட்சிகள் போலவே இயங்கி வருகின்றனர். இதில் பகிரப்படும் ம ...

#rajini

Read More


Top