Cine Bits

கதை திருட்டா? - பார்த்திபன் கருத்துக்கு அயோக்யா பட இயக்குனர் பதில்

Tags: Vishal   
Slug: Ayokiya film director for parthiban view

விஷால், ராசி கண்ணா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் அயோக்யா. இப்படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்து இருந்தார். அயோக்யா படத்தின் கதை தனது உள்ளே வெளியே படத்தின் சாயல் தான் என்று பார்த்திபன் பதிவிட பரபரப்பானது. தனது படத்தை திருடி தெலுங்கில் படமாக்கி அதை தமிழில் எடுக்கும்போது தன்னையே வில்லனாக்கியது அயோக்கியத்தனம் என்று கூறி இருந்தார். துகுறித்து அயோக்யா படத்தின் இயக்குனர் வெங்கட் மோகனிடம் கேட்டோம். ‘அவரது பதிவை நானும் பார்த்தேன். அது அவரது கருத்து. உள்ளே வெளியேயின் கதை சாயல் இதில் இருந்து இருக்கலாம். நான் கதை எழுதவில்லை. தெலுங்கில் கதையை எழுதிய வக்கந்தம் வம்சியிடம் தான் கேட்கவேண்டும். நான் அந்த கதையில் கிளைமாக்சை மாற்றி இருக்கிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. முன்னணி கதாநாயகன் ஒருவர் இப்படி ஒரு நெகட்டிவ் கிளைமாக்சில் நடித்ததற்காக விஷாலுக்கு தான் எல்லா பாராட்டுகளும் சேரும் இவ்வாறு அவர் கூறினார்.

sub news
Posted By
anis

Wednesday, May 15, 2019

Other Cine Bits

 Wednesday, May 15, 2019

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. பொதுவாக அஜித் ஒவ்வொரு படத்திற்கும் 40லிருந்து 50 கோடி சம்பளம் வாங்கி வந்தார், விஸ்வாசம் படத்தின் ...

Ajith

Read More


 Wednesday, May 15, 2019

பிரசாந்த் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் தமிழில் வெளியான ‘வண்ண வண்ண பூக்கள் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. இவர் திரைப்படங்களை தாண்டி ஏராளமான சீரியல்களிலும் நடித ...

Vinodhini

Read More


 Tuesday, May 14, 2019

விஜய் டிவியில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் டிடி. விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் டிடி. அவரது ஜாலியான பேச்சு மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்பால் ...

DD

Read More


 Tuesday, May 14, 2019

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ், ஜே.கே இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம், ஐஆர் 8. அனீபா, விஷ்வா, பிந்து, அப்புக்குட்டி, கராத்தே ராஜா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.வி.மணி. இசை, கோண்ஸ். சிங்கமுகம், சொல்ல மாட்டேன் ஆக ...

IR 8

Read More


 Tuesday, May 14, 2019

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வ ...

Varalakshmi

Read More


Top