Cine Bits

விஜய்சேதுபதி, திரிஷாவுக்கு சிறந்த நடிகர் – நடிகை விருது!

Tags: #awards   
Slug: Best actor awards

நார்வேயில் கடந்த 9 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சிறந்த படமாக பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த ‘பரியேறும் பெருமாள்’ படம் தேர்வாகி உள்ளது. 96 படத்தில் ஜோடியாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகராகவும், திரிஷா சிறந்த நடிகையாகவும் தேர்வாகி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய லெனின் சிறந்த டைரக்டராக தேர்வாகி உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கனா படத்திற்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்படுகிறது. சிறந்த இசையமைப்பாளராக பரியேறும் பெருமாள், வடசென்னை படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தேர்வாகி உள்ளார். சிறந்த பாடகி விருது சின்மயிக்கும், சிறந்த பாடகர் விருது அந்தோணி தாசனுக்கும் வழங்கப்படுகிறது. கலைச்சிகரம் விருதை நடிகர் விவேக் பெறுகிறார். விருது வழங்கும் விழா ஏப்ரல் 27–ந் தேதி நார்வே தலைநகரான ஓசுலோவில் நடக்கிறது.

sub news
Posted By
saran

Thursday, January 10, 2019

Other Cine Bits

 Thursday, January 10, 2019

தமிழ் பட உலகின் ‘பிரபல’ கதாநாயகியான நயன்தாரா, முதன் முதலாக ஒரு படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார், படத்தின் பெயர், ‘ஐரா.’ கே.எம்.சர்ஜுன் இயக்கவுள்ளார் இப்படத்தைப்பற்றி அவர் ...

#Nayanthara

Read More


 Wednesday, January 9, 2019

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வர ...

#Ishwaryarajesh

Read More


 Wednesday, January 9, 2019

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் தெரிந்த ஒரு உச்ச நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு 'பேட்ட' படம் திரைக்கு வரவிருக்கிறது இந்நிலையில் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிக்க ...

#rajini

Read More


 Wednesday, January 9, 2019

'மாரி' படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் சமீபத்தில் வெளியானது . பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ...

# MARRI2

Read More


 Wednesday, January 9, 2019

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்க ...

#Ajith viswasam

Read More


Top