Cine Bits

அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கிற ஜி.வி.பிரகாஷின் படங்கள்!

Tags: #g.v.prakash   
Slug: Gvprakash next movies

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து`சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும், நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். மைன்ட் ஸ்கிரீன் பிலிம் இன்ஸ்ட்டியூட் சார்பாக லதா மேனன் தயாரிப்பில் இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதுமட்டுமின்றி படம் முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து காமன்மேன் பிரசன்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக, மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இம்மாத இறுதியில் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

sub news
Posted By
saran

Friday, January 11, 2019

Other Cine Bits

 Thursday, January 10, 2019

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் கெஜ்ரிவால் உடனான இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. அவருக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து கூறியிருக்கிறார். அதேபோன்ற ...


 Thursday, January 10, 2019

மாரி 2 படம் வெளியாகி சிறப்பாக ஓடி வரும் இத்தருணத்தில் தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி மறுபடியும் இணைந்து வெளியாகவிருக்கிற படம் அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி s தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். தற்போது இப் ...


 Thursday, January 10, 2019

நார்வேயில் கடந்த 9 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சிறந்த படமாக பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த ‘பரியேறும் பெருமாள்’ படம் தேர்வாகி உள்ளது. 96 படத்தில் ஜோடியாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகராகவும ...


 Thursday, January 10, 2019

தமிழ் பட உலகின் ‘பிரபல’ கதாநாயகியான நயன்தாரா, முதன் முதலாக ஒரு படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார், படத்தின் பெயர், ‘ஐரா.’ கே.எம்.சர்ஜுன் இயக்கவுள்ளார் இப்படத்தைப்பற்றி அவர் கூறியதாவது, "ஐரா" என்றால் யானை என்று அர்த்தம். இது ஒரு திகில் படம் “நயன்தாரா ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும்,‘ஐரா’ படத்துக்கு அவர் கொடுத் ...


 Wednesday, January 9, 2019

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அவ்விழாவில் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, "இப்போது எல் ...


Top