Cine Bits

அசுரன் பட வெற்றி விழாவில் விஜய் படம் குறித்து சர்ச்சை கருத்து - தர்மசங்கடத்தில் தனுஷ் !

Tags: Dhanush   
Slug: Ijays controversy over film success dhanush

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதனை சமீபத்தில் படக்குழுவினர் ஒன்று சேர்ந்து கொண்டாடி ரசிகர்களுக்கு நன்றி கூறினர். அப்போது மேடையில் இப்படத்தில் நடித்திருந்த நடிகர் பவன் என்பவர் குருவி படத்துக்கு 150 நாள் கொண்டாட்டம் கொண்டாடினாங்க. ஆனால் அந்த படம் 150 நாள் ஓடுச்சானே தெரியல என கிண்டலடித்தார், இதற்கு தனுஷால் கூட சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார். அதன் பின்னர் பேசிய தனுஷ் எது சரியோ அத எடுத்துக்கோங்க, எது சரியில்லையா அதை விட்டுடுங்க என கூறியுள்ளார். இதற்கு முன்பு தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் கமல் படத்தை சாணியால் அடித்தேன் எனக்கூறி சர்ச்சையை கிளப்பினார். அந்த கருத்து பலராலும் எதிர்க்கப்பட்டு பின்பு அந்த பேச்சுக்கு ராகவா மன்னிப்பும் கேட்டார். இப்பொழுது இந்த பேச்சும் விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகர்கள் சும்மா இருந்தாலும் கூட இருப்பவர்கள் இதைப்போன்று பேசி சர்ச்சையை உண்டாகிவிடுகின்றனர்.

sub news
Posted By
anis

Tuesday, January 14, 2020

Other Cine Bits

 Tuesday, January 14, 2020

கொரிய படத்தின் ரீமேக்கில் ரெஜினா காஸன்ட்ராவும் நிவேதா தாமஸும் நடிக்க உள்ளனர். சமீபகாலமாகவே இவருக்கு அவ்வளவாக படவாய்ப்புகள் இல்லை. தெலுங்கின் ஓரிரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். தற்சமயம் இவரது கவன ...

Nivetha Thomas

Read More


 Monday, January 13, 2020

எஸ்.தாணு தயாரிப்பில், சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் புது படமும், நாவலை அடிப்படையாக கொண்டது. இப்படம் ஜல்லிக்கட்டு கதையை கதை களமாக கொண்டுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது.  தற்போது வாடிவாசல் ...

Surya

Read More


 Monday, January 13, 2020

பொன்னியின் செல்வன் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் உருவாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ...

Jeyam ravi

Read More


 Monday, January 13, 2020

தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்தி படங்களிலும் நடித்துவரும் இவர் சமீபத் ...

Rana

Read More


 Monday, January 13, 2020

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இத ...

Jeeva

Read More


Top