Cine Bits

மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கு - கமல் கோரிக்கை

Tags: Kamalhaasan   
Slug: Kamal demands treason case against 49 celebrities including mani ratnam

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்கள். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட சொல்லி நடக்கும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐன்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமரை விமர்சித்து பிரதமருக்கே கடிதம் எழுதுவது அரசியல் சாதத்துக்கு எதிரானது, விரோதமானது. தேசத்துரோக குற்றம் என்று பீகார் மாநிலம் முசாபர்பூரைச்சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதற்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது. இதுகுறித்து மக்கள் நீதிமய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கையில், பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். பார்லிமென்டில் அவர் வெளியிட்ட அறிக்கைகள், பேசிய பேசிச்சுக்கள் அதை உறுதி செய்கின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா? எனது சகாக்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். எங்கள் உச்சநீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூறி ஒரு குடிமகனாக கேட்டுக்கொள்கிறேன். என கமல் கோரியுள்ளார்.

sub news
Posted By
anis

Wednesday, October 9, 2019

Other Cine Bits

 Wednesday, October 9, 2019

தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மிக சில ஒருவரில் நடிகர் மாதவனும் ஒருவர். அவரது பரிமாணத்தில் வெளியான அன்பே சிவம், ரன், ஆயுத எழுத்து போன்ற படங்களே சான்று. அனுஷ்கா ...

Madhavan

Read More


 Tuesday, October 8, 2019

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு ம ...

International Award

Read More


 Tuesday, October 8, 2019

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலைய ...

Ajith

Read More


 Tuesday, October 8, 2019

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயார ...

KalaiPuli SThanu

Read More


 Tuesday, October 8, 2019

தவசி படத்தில் ``எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா” என்று நடிகர் வடிவேலுவிடம் பேசும் ஒற்றை வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் ப ...

Krishna Moorthy

Read More


Top