Cine Bits

மலையாளத்தில் பெண் தாதா கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா

Tags: Radhika   
Slug: Lady dhadha in malayalam movie

1980-களில் தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் ராதிகா. இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் ராதிகா நடிப்பில் 1993-ம் ஆண்டு ‘அர்த்தனா’ என்ற படம் வெளியானது. அதன்பிறகு மலையாளத்தில் அவர் நடிக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு திலீப் நடிப்பில் வெளியான ‘ராம்லீலா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு மலையாளத்தில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இந்த படத்தில் பெண் தாதா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறார். பெண் தாதா மற்றும் அவரது நான்கு பிள்ளைகளைப் பற்றிய படமாக இது உருவாகியிருக்கிறது. அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் 'இட்டிமானி மேட் இன் சைனா' படத்திலும் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 34 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால் படத்தில் ராதிகா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

sub news
Posted By
anis

Tuesday, March 19, 2019

Other Cine Bits

 Tuesday, March 19, 2019

மறைந்த இளம் இயக்குநர் கொல்லாபுடி ஸ்ரீனிவாஸ் நினைவாக, அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் சிறந்த அறிமுக இயக்குநர் விருதை வழங்கி வருகின்றனர். இந்த விருது கடந்த 21 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ...

Vijaysethupathy

Read More


 Tuesday, March 19, 2019

நடிகை பூஜா காந்தி தமிழில் கொக்கி படம் மூலம் அறிமுகமாகி வைத்தீஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள திரையுலகிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பூஜா பெங்களூருவ ...

Pooja gandhi

Read More


 Tuesday, March 19, 2019

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான ஷாலினி பாண்டே, தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 100 சதவீதம் காதல், ஜீவா ஜோடியாக கொரில்லா, விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் நடித்து வருக ...

Shalini Pande

Read More


 Tuesday, March 19, 2019

மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘வானம் கொ ...

Vikram Prabhu

Read More


 Monday, March 18, 2019

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது பி.எஸ ...

Sivakarthikeyan

Read More


Top