Cine Bits

நடிகை மஹிமா நம்பியாரின் அடுத்தடுத்த படங்கள்!

Tags: #Mahima Nambiyar   
Slug: Mahima nambiyar next projects

‘சாட்டை’ படம் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை நடிகை மஹிமா நம்பியார். அதையடுத்து ‘குற்றம் 23’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் ‘கொடிவீரன்’. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐங்கரன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதையடுத்து ஆர்யாவுக்கு ஜோடியாக ‘மகா முனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் மஹிமா நம்பியார். இதற்கிடையே மலையாளத்தில் ‘மதுர ராஜா’ படத்திலும் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் நடிகை மஹிமா நம்பியார் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘ஐங்கரன்’ படத்தில் எனக்கு செவிலிப் பெண் பாத்திரம். அதே போல ‘மகா முனி’ படத்திலும் அற்புதமான பாத்திரம். நகரப் பின்னணியில் திரில்லர் களமாக விரியும் இந்தப் படமும் எனக்கு நடிப்பில் நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தை சாந்தகுமார் இயக்கி வருகிறார். மேலும் மலையாளத்தில் மம்முட்டி சார் நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தின் அடுத்த பாகமாக விரியும் ‘மதுர ராஜா’ படத்துக்கான இன்னும் ஒருநாள் படப்பிடிப்பும், டப்பிங் மட்டும்தான் இருக்கு. இந்தக் கதைக்கும் மதுரைக்கும் சம்பந்தம் இருப்பதால்தான் ’மதுர ராஜா’ என்று பெயர் வெச்சிருக்காங்க. படத்தில் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நான் நடித்திருக்கேன்’’ என்கிறார் மஹிமா நம்பியார்.

sub news
Posted By
anis

Friday, February 8, 2019

Other Cine Bits

 Friday, February 8, 2019

நடிகர் பார்த்திபன் படத்தில் மட்டுமல்ல எப்போதும் தான் பேசும் விசயங்கள் பல விசயங்களை குறிப்பிட்டு பேசுவார். அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது. அது சில நேரங்களில் ரசனையாக இருக்கும். அண்மையில் பிரேம் கும ...

#Parthiban

Read More


 Thursday, February 7, 2019

ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் திரிஷா. திருமணமாகி சினிமாவில் இருந்து ஒதுங்கிய சிம்ரன் சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடித்தார். பின்னர் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் ரஜினிகா ...

#simran

Read More


 Thursday, February 7, 2019

டைரக்டர்கள் சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து படங்களை இயக்கி வருகிறார்கள்!
சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து தயாரித்த ‘கோலி சோடா’ படம் வெற்றிகரமாக ஓடியதால், அதே பாணியில் சிறுவர்களை க ...

#youngsters

Read More


 Thursday, February 7, 2019

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் தோற்றத்தை போன்று அச்சுஅசலாக அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் என்பவர் காட்சியளிப்பது சமூக வலைதளங்க ...

#Anushkasharma

Read More


 Wednesday, February 6, 2019

இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்த குஷ்பூவிற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளார்கள். அதில் ஒருவரான அனந்திதா ஒரு புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதாவது Anmol என்ற பெயரில் ஒரு புதிய சமூக வலைதளம் உருவாக்கி ...

#kushboo

Read More


Top