Cine Bits

அதர்வாவுக்கு வில்லனாக நந்தா !

Tags: Nandha   
Slug: Nanda a villain for atharva

காவல்துறை அதிகாரியாக அதர்வா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகை நந்தா வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார். 100' படத்துக்குப் பிறகு தமிழில் 'குருதி ஆட்டம்', 'தள்ளிப் போகாதே', 'ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அதர்வா. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ரவீந்திர மாதவ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அதர்வாவுக்கு வில்லனாக நடிக்க நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இயக்குநர் ரவீந்திர மாதவ் கூறியிருப்பதாவது:வில்லன் கதாபாத்திரத்துக்கு ஒருவரைத் தேடுவதென்பது நீண்ட பயணமாக இருந்தது. இறுதியாக நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பு கொண்ட அவர் நடிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்கிறார். எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்தப் பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரம் என்பது உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாகச் செயல்படுபவர். இரண்டிலுமே நந்தா தன்னை நிரூபித்தவர். கரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது இவ்வாறு ரவீந்திர மாதவ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சக்தி சரவணன், எடிட்டராக கலை, சண்டை இயக்குநராக சரவணன், கலை இயக்குநராக ஐயப்பன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

sub news
Posted By
anis

Friday, March 20, 2020

Other Cine Bits

 Wednesday, March 18, 2020

சமீபத்தில் மலையாளத்தில் பிரிதிவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஓய்வு பெறப்போகும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ஓய்வுபெற்ற இளம் ராணுவ அதிகா ...

Dhanush

Read More


 Wednesday, March 18, 2020

மாஸ்டர் படத்தை கொண்டாடுவதற்கு முன்னதாகவே விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தின் தகவல் கிடைத்துள்ளது. விஜய்யை வைத்து கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற படங்களை இயக்கி மாபெரும் வெற்றி படைத்த இயக்குனர ...

Vijay

Read More


 Wednesday, March 18, 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 990 ...

Corona

Read More


 Wednesday, March 18, 2020

சன் பிக்சர்ஸ் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்திலிருந்து ஒரு படம் வருகின்றது என்றால் கண்டிப்பாக அந்த படம் ஹிட் தான் என்று கூறிவிடலாம். ஏனெனில் அந்த அளவிற்கு அவர்களின் ப்ரோ ...

Sun Pictures

Read More


 Tuesday, March 17, 2020

‘ஜிப்ஸி’ நாயகி நடாஷா சிங் பொறி­யி­யல் துறை­யில் பட்­டம் பெற்­ற­வர். சிறு வயது முதலே சினி­மா­வில் நடிக்க வேண்­டும் என்று ஆசை­யாம். வளர்ந்து ஆளான ப ...

Natasha singh

Read More


Top