Cine Bits

நடிகர் பிரகாஷ் ராஜ் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு!

Tags: #prakashraj   
Slug: Prakash raj met arvind gejrival

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் கெஜ்ரிவால் உடனான இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. அவருக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து கூறியிருக்கிறார். அதேபோன்று ஆம் ஆத்மி தரப்பில் இருந்தும் பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், 2017-ம் ஆண்டு இந்துத்துவ அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை பற்றியும் நடிகர் பிரகாஷ்ராஜ் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

sub news
Posted By
saran

Thursday, January 10, 2019

Other Cine Bits

 Thursday, January 10, 2019

மாரி 2 படம் வெளியாகி சிறப்பாக ஓடி வரும் இத்தருணத்தில் தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி மறுபடியும் இணைந்து வெளியாகவிருக்கிற படம் அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி s தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். தற்போது இப் ...


 Thursday, January 10, 2019

நார்வேயில் கடந்த 9 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சிறந்த படமாக பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த ‘பரியேறும் பெருமாள்’ படம் தேர்வாகி உள்ளது. 96 படத்தில் ஜோடியாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகராகவும ...


 Thursday, January 10, 2019

தமிழ் பட உலகின் ‘பிரபல’ கதாநாயகியான நயன்தாரா, முதன் முதலாக ஒரு படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார், படத்தின் பெயர், ‘ஐரா.’ கே.எம்.சர்ஜுன் இயக்கவுள்ளார் இப்படத்தைப்பற்றி அவர் கூறியதாவது, "ஐரா" என்றால் யானை என்று அர்த்தம். இது ஒரு திகில் படம் “நயன்தாரா ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும்,‘ஐரா’ படத்துக்கு அவர் கொடுத் ...


 Wednesday, January 9, 2019

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அவ்விழாவில் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, "இப்போது எல் ...


 Wednesday, January 9, 2019

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் தெரிந்த ஒரு உச்ச நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு 'பேட்ட' படம் திரைக்கு வரவிருக்கிறது இந்நிலையில் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே தான் இருக்கின்றார். கட்சி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒருவருடம் ஆகின்றது, ஆனால் தற்போது வரை அவர் வரவில்லை. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ‘இந்தியாவில் ரஜி ...


Top