Cine Bits

பிரியா வாரியர் மீது இயக்குநர் புகார்!

Tags: Priya varrier   
Slug: Priya varrier oru adar lover

ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்தது பிரபலமானதை அடுத்து அவரது புகழ் கூடியது. இந்த படத்திற்காக நூரின் ஷெரீப் தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதால் நூரினை துணை கதாபாத்திரமாக்கி பிரியாவை முதன்மை கதாநாயகியாக மாற்றினார்கள். படம் கடந்த மாதம் வெளியானது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பிரியா வாரியர் மீது அந்த படத்தின் டைரக்டர் ஓமர் லூலு புகார் கூறி உள்ளார். இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பில் பிரியாவாரியர் கதாநாயகி கிடையாது அவர் கண்ணடித்தது பிரபலம் ஆனதால், தயாரிப்பாளர் என்னை அணுகி பிரியா வாரியரை கதாநாயகியாக வருவது போல் கதையை மாற்றி எழுதும்படி கூறினார். நூரின் ஷெரிப் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிறகு அவரது கதாபாத்திரம் துணை கதாபாத்திரமாக்கப்பட்டது. படத்தினால் புகழ் கிடைத்த பின்னர் பிரியாவாரியர் பட புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. பட ரிலீசுக்கு பிறகு படத்தை பிரபலபடுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. வளர்ந்துவரும் நடிகையான அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது’ அவ்வாறு நடந்தால் அது அவருடைய எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்றார்.

sub news
Posted By
anis

Thursday, March 14, 2019

Other Cine Bits

 Thursday, March 14, 2019

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படம் பற்றி ஹரிஷ் கல்ய ...

Harish kalyan

Read More


 Thursday, March 14, 2019

புதிய படமொன்றில் கார்த்தி ஒப்பந்தமாகி உள்ளார் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இது கார்த்திக்கு 19-வது படமாகும். இன்னும் பெயர் வைக்கவில்லை, அதிரடி கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இதன் படப்பி ...

Karthi

Read More


 Wednesday, March 13, 2019

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள ...

Vijay

Read More


 Wednesday, March 13, 2019

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜீலி, தற்போது படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகை ஜீலி. சென்னை எழும்பூரில் போலீஸ் வாகனம் மீது அவரி ...

Julie

Read More


 Tuesday, March 12, 2019

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் உண்மை’. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுதான் இந ...

Lakshmi ramakrishnan

Read More


Top