Cine Bits

படம் நஷ்டமடைந்ததால் தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி!

Tags: #saipallavi   
Slug: Saipallavi padipadi leche manasu

மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து மொழி  ரசிகர்களாலும் கவரப்பட்டவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சாய் பல்லவி, தமிழிலில் தனுஷ் ஜோடியாக நடித்த மாரி-2 படம் டிசம்பர் மாதம் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து சூர்யாவுடன் என்ஜிகே என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஷர்வானத் - சாய்பல்லவி நடித்த ‘படி படி லேச்சு மனசு’ என்ற தெலுங்கு படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஆந்திராவில் அதிகமான தியேட்டர்களில் திரையிட்டனர். ஆனால் படத்துக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை. இந்த படம் ரூ.22 கோடிக்கு வியாபாரமாகி ரூ.8 கோடி மட்டுமே லாபம் ஈட்டித்தந்தாக கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும்,படத்துக்கு சாய்பல்லவிக்கு பேசிய படியே சம்பளத்தில் மீதி தொகை ரூ.40 லட்சத்தை கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்தபோது அதை அவர் வாங்க மறுத்துவிட்டார். படம் நஷ்டமடைந்ததால் ரூ.40 லட்சத்தையும் அவர் விட்டுக்கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய ஆண் நடிகர்கள் கூட படம் வெளிவந்தவுடன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எனக்கென்ன என்று இருக்கும்பொழுது ஒரு நடிகையாக படத்திற்கான நஷ்டத்திலேயும் பங்கெடுத்துக்கொள்ளும் இவரை தெலுங்கு பட உலகினர் பாராட்டுகிறார்கள்.

sub news
Posted By
saran

Friday, January 11, 2019

Other Cine Bits

 Friday, January 11, 2019

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து`சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஜி. ...

#g.v.prakash

Read More


 Thursday, January 10, 2019

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக பெங்களூரு மத்திய தொகுதியில் போட் ...

#prakashraj

Read More


 Thursday, January 10, 2019

மாரி 2 படம் வெளியாகி சிறப்பாக ஓடி வரும் இத்தருணத்தில் தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி மறுபடியும் இணைந்து வெள ...

#dhanush

Read More


 Thursday, January 10, 2019

நார்வேயில் கடந்த 9 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது பட்டியல் வெ ...

#awards

Read More


 Thursday, January 10, 2019

தமிழ் பட உலகின் ‘பிரபல’ கதாநாயகியான நயன்தாரா, முதன் முதலாக ஒரு படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார், படத்தின் பெயர், ‘ஐரா.’ கே.எம்.சர்ஜுன் இயக்கவுள்ளார் இப்படத்தைப்பற்றி அவர் ...

#Nayanthara

Read More


Top