Cine Bits

முழுநீள காமெடி படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலக்ஷ்மி

Tags: Varalakshmi   
Slug: Varalakshmi paired up with vimal for the full length comedy

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் வரலக்ஷ்மி பேசுகையில் ‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.

sub news
Posted By
anis

Tuesday, August 13, 2019

Other Cine Bits

 Tuesday, August 13, 2019

சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிகழ்வு பற்றி அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு, சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து இருப்பத ...

Keerthi Suresh

Read More


 Tuesday, August 13, 2019

நடிகர் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில்  சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு, வெற்றி ...

Vijay sedhupathy

Read More


 Monday, August 12, 2019

தேசிய விருது பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, அதை தவறவிட்ட தமிழ் படங்கள் எவை என தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் 66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்க ...

National Award

Read More


 Monday, August 12, 2019

மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் ஊடகங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித ...

Keerthi Suresh

Read More


 Monday, August 12, 2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்திற்கு முன் எலிமினேட் ஆனவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து அவர் கவர்ச்சி புகைப்படங்கள், நடன வீடியோ என வெளியிட்டு வருகிறார். இப்போது அவரை ...

Meera Mithun

Read More


Top