Cine Events

குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் !

Tags: Chocolate   
Slug: Awareness short film for kids

பன்னிரண்டு வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாக்லெட் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கவிதா தயாரித்திருக்கும் குறும்படம் சாக்லேட். இதில் நட்டி என்கிற நட்ராஜ், காயத்ரி, தேஜஸ்வினி, தீக்ஷளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் லாவண்யா நான்சி இயக்கியிருக்கிறார். பாடல்களை மீரான், ம.மோகன் எழுத, பவதாரிணி பாடியிருக்கிறார். குறும்படம் ஒன்றிற்கு பவதாரிணி பின்னணி பாடியிருப்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறும்படத்தினை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு, விருகம்பாக்கம் தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் வி.என்.ரவி, விளாத்திகுளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஐசரி.கே.கணேஷ், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சாய் தன்ஷிகா, இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான கவிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பொதுவாக தங்களுடைய குழந்தைகளை பெற்றோர்கள் முழுமையாக கவனிப்பதில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் இந்த குறும்படம் பெற்றோர்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன், என்றார். இதனைத் தொடர்ந்து சாக்லேட் குறும்படத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டார். வருகை தந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் கவிதா நன்றி தெரிவித்தார்.

sub news
Posted By
anis

Friday, September 27, 2019

Other Cine Events

 Wednesday, September 25, 2019

டைரக்டர் சரண் இயக்கியிருக்கும் புதிய படம், “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.“ இதில், பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காவ்யா தப்பார் நடித்திருக்கிறார். மேலும் ச ...

Radhika sarathkumar

Read More


 Wednesday, September 4, 2019

நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள், துயரங்கள் ஆகியவற்றை யதார்த்தமாக சொல்லும் படமாக உருவாகிவருகிறது பாடலாசிரியர் சினேகன் நடிக்கும் 'பொம்மிவீரன்'. உழவன் தி ...

Snehan

Read More


 Tuesday, September 3, 2019

காமெடியனாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக பட்டையை கிளப்பும் நடிகர் தான் சார்லி. அதனை முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. நான்கு தலைமுறை நடிகர்களுடனும் சினிமாவில் கொடி  கட்ட ...

Charlie

Read More


 Tuesday, September 3, 2019

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளா ...

Sivakarthikeyan

Read More


 Monday, August 26, 2019

அமெரிக்கவாழ் இந்தியரான டெல் கே.கணேசன், கய்பா பிலிம்ஸ் சார்பில் ’கிரிஸ்துமஸ் கூப்பன்’ மற்றும் ‘டெவில்ஸ் நைட்’ ஆகிய ஹாலிவுட் படங்களை தயாரிக்கிறார். இந்த இரண்டு படங்களில் நடிகர ...

G.v.Prakash

Read More


Top