Cine Events

ஜீவா நடிக்கும் கலக்கலான கமர்ஷியல் படம் - சீறு !

Tags: Jeeva   
Slug: Jeevas seeru movie

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கருத்துக்கள் கொண்ட படங்களை,  ரசிகர்களை கவரும் வகையில் வெற்றிப்படங்களாக தந்து வரும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் Dr. ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “சீறு”. நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரத்ன சிவா எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிகை  ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, வருண் மற்றும் காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் ரத்தினவேலு கூறியது, இது மூன்றாவது படம். முதலில் அஷ்வினுடன் கதை சொன்ன போது எந்த ஹீரோவை வைத்து செய்யலாம் என பேசினோம். ஒரு ஆக்‌ஷன் ஹீரோ வேண்டும் என்று ஜீவாவிடம் போனேன். கதை கேட்டவுடன் நாம் பண்ணலாம் என்று சொன்னார். ஐசரி கணேஷ் சாரிடம் கதை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் அவர் கதை கேட்டு இது ஹிட்டாகும் என்றார். எளிதில் எந்த ஒரு விசயத்தையும் தீர்மாணிப்பவராக அவர் இருக்கிறார். அஷ்வின் மொத்த படத்திற்கும் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். ஜீவா ஒரு அருமையான நடிகர். இதில் வில்லனாக நடித்துள்ள வருண், சாந்தினி ஆகியோர் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்கள். படத்திற்கு மிகப்பெரிய பலம் இமான் இசை. இந்தப்படம் வரும் 7ந்தேதி வருகிறது.

sub news
Posted By
anis

Monday, February 3, 2020

Other Cine Events

 Friday, January 31, 2020

மணிரத்தினம் தயாரிப்பில் தானா இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் மற்றும் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் வானம் கொட்டட்டும். இப்படம் வருகிற பிப்ரவரி 7-ஆம் ...

Manirathinam

Read More


 Thursday, January 23, 2020

சென்னையில் ஒய்।எம்।சி।ஏ கல்லூரியில் வருகின்ற 8 ஆம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடல்கள் பாட உள்ளார். இதில் அவருடன் பணியாற்றிய இசை கலைஞர்களை வைத்து ...

Sid Sriram

Read More


 Friday, January 17, 2020

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இ ...

ilayaraja

Read More


 Monday, December 16, 2019

FESTUS PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிப்பில் டேனியல் VP எழுதி இயக்கியுள்ள படம் வணிகன். நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆனந் ...

G.v.Prakash

Read More


 Monday, December 9, 2019

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ஆதித்யா அருணாச்சலம் ...

Rajini

Read More


Top