Cine Events

ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா !

Tags: G.v.Prakash   
Slug: Yuvanshankar raja who bought jv prakashs song

FESTUS PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிப்பில் டேனியல் VP எழுதி இயக்கியுள்ள படம் வணிகன். நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக  நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம்வந்து கொண்டிருக்கும் நக்ஷத்திரா நாகேஷ் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சார்லி,  புட்சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் டேனியல்VP. படத்தை பற்றி இயக்குனர் டேனியல்VP. கூறியதாவது, "இது ஒரு யதார்த்தமான திரில்லர் படம். இந்த படத்தின் பாடல்களை கேட்ட பிரபல  இசையமைப்பாளர்  யுவன்சங்கர் ராஜா, இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார். அது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறோம். தவிர இந்தப் படத்தில் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் மோகன்ராஜன் எழுதிய என்ற பாடலை. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டார். அது தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார்.

sub news
Posted By
anis

Monday, December 16, 2019

Other Cine Events

 Monday, December 9, 2019

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ஆதித்யா அருணாச்சலம் ...

Rajini

Read More


 Monday, December 9, 2019

'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்திற்கான பூஜை  சென்னையில் நடைபெற்றது. 'கேங்க் லீடர்' படத்தின் மூலம் தெலுங்க ...

Sivakarthikeyan

Read More


 Thursday, November 21, 2019

மறைந்த நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இளையராஜா, சிவகுமார் உள்ளிட்ட திரையுலகினரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சிவகுமார் நமீபியார் பற்றி பேசுகையில் ...

MN Nambiyar

Read More


 Monday, November 18, 2019

கேரளத்தைப் பூா்வீகமாகக் கொண்ட எம்.என்.நம்பியாா் சிறு வயதிலேயே தமிழகத்தின் ஊட்டி பகுதிக்கு இடம் பெயா்ந்தாா். அங்கு சிறிதுகாலம் கல்வி பயின்ற நம்பியாா், அங்கு நாடகம் நடத்த வந்திருந்த நவாப் ராஜமாணிக்கம ...

MN Nambiyar

Read More


 Thursday, November 7, 2019

கமலஹாசனின் 65 வது பிறந்த நாள் மற்றும் திரையுலகில் அவரின் 60 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக நவம்பர் 17ல் சென்னையில் உள்ள நேரு உல் விளையாட்டு அரங்கத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா ...

Ajith

Read More


Top