Cine Gossips

உச்ச நடிகையின் முடிவால் கோபமான சீனியர் நடிகர் !

Tags: Gossips   
Slug: An angry senior actor by the end of peak performance

முன்னணி நடிகைகளில் ஒருவரான அந்த நம்பர் 1 நடிகை பிரபல ஹீரோக்கள் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர். ஒவ்வொரு படம் முடிந்தபிறகும் அதை ரசிகர்களிடம் பிரபலப்படுத்த புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தான் நடிக்கும் எந்த படத்துக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற பாலிசியை வைத்திருக்கிறார் நடிகை. அவர் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது படத்தில் நடிக்கும் ஹீரோ இன்னும் பிற நட்சத்திரங்கள் மட்டுமே புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.தற்சமயம் தெலுங்கு சீனியர் நடிகர்  ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார் நடிகை. நடிகரின் மகன் படத்தை தயாரிக்கிறார். ஒப்பந்தம் செய்யும்போதே பல கோடி செலவில் இப்படம் தயாரிக்கப்படுவதால் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும என்று நடிகையிடம் கேட்டுக்கொள்ள அவரும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கலந்து கொள்வதாக கூறினாராம். படம் முடிந்து அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் வேலைகளில் தயாரிப்பாளர் ஈடுபட்டிருக்கிறார். நிகழ்ச்சியில் நடிகையை பங்கேற்பதற்கு உறுதி செய்ய,  பலமுறை போனில் அழைத்தும் சரியான பதில் இல்லையாம். இது சீனியர் நடிகருக்கும், மகனுக்கும் தெரியவர அவர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம். நடிகை தரப்பில் கேட்டால், ‘படங்கள் அதன் கதையை பொருத்தே வெற்றி பெறுகிறது. புரமோஷனை பொறுத்து அல்ல’ என கூலாக பதில் சொல்கிறாராம்.

sub news
Posted By
anis

Wednesday, September 4, 2019

Other Cine Gossips

 Tuesday, September 3, 2019

இயக்குனரை காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்த களனி  நடிகை, தற்போது சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், பொருளாதார பிரச்னையால் மிகவும் கஷ்டப்படுவதாக, அவருக்கு நெருக் ...

Gossips

Read More


 Tuesday, September 3, 2019

நடனப்புயல் நடிகருடன் அந்த இளம் நடிகைக்கு நட்பு முற்றிவிட்டதாம். அதனால், எந்த இடத்தில் ஷூட்டிங் நடந்தாலும், நடிகருடன் நட்பு பாராட்ட, அவர் இருக்கும் இடத்துக்கே பிளைட் டிக்கெட் புக் பண்ண சொல்லி வற்புற ...

Gossips

Read More


 Friday, August 23, 2019

தமிழிலில் ஓரிரண்டு படங்ககளில் நடித்தாலும் இந்த நடிகைக்கென ரசிகர் கூட்டம் தனியாக உள்ளது. இவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்। இந்நிலையில் வெளிநாட்டு தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டது. இதற்கு அவரது தாய் வி ...

Gossips

Read More


 Tuesday, August 20, 2019

‘பதி’ நடிகர் ஓய்வே இல்லாமல் நடிக்கும் அளவுக்கு படங்கள் வைத்து இருக்கிறார்.‘பதி’ நடிகர் நடித்து வெளிவரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதால், அவருக்கு சாப்பிடவும், தூங்கவும ...

Gossips

Read More


 Tuesday, August 20, 2019

ரொமாண்டிக் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அசுர நடிகரை வைத்து படம் இயக்கினாராம். இந்த படமும் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியதாம். இயக்குனரும் இப்படத்தை திட்டமிட் ...

Gossips

Read More


Top