Cine Gossips

சினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம் !

Tags: Gossips   
Slug: Malayala super star exit cinema

இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவரான லால் நடிகர், சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளை கடந்துவிட்டது. இருந்தாலும், தற்போதைய இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் வித்தியாசமான, அதிரடியான கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறாரார். இந்நிலையில் இனிவரும் காலங்களில் சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம். தற்போது அவர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 4 படங்களில் நடித்து வருகிறாராம். மேலும் தான் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறாராம். அந்த படத்திற்கு பிறகுதான் சினிமா படங்களை குறைத்துக் கொண்டு, குடும்பத்திற்கு அதிக நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறாராம்.

sub news
Posted By
anis

Monday, May 6, 2019

Other Cine Gossips

 Monday, May 6, 2019

அங்காடி பட நடிகைக்கும், அஞ்சாத நடிகைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறதாம். இருவருக்கும் சண்டைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்களாம். தற்போது இனிப்பு கடை நடிகையின் விளம்பர படத்தை அஞ்சாத நடிகை கைப்பற்றி விட்டாராம். இதைக் கண்டுக்கொள்ளாத நடிகை, தற்போது பெரிய பட வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். இதனால், அங்காடி பட நடிகை அஞ்சாத நடிகை மீது கடுங்கோ ...


 Wednesday, April 17, 2019

தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. பேய் வேடங்களில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரே ஒரு நாயகி மட்டும் பேய் வேடம் போட மறுக்கிறார். அந்த நாயகி கேரளாவை சேர்ந்தவர். யானை படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வந்தவர். பேயாக நடிப்பதற்கு வந்த 2 பட வாய்ப்புகளை, “வேண்டாம்” என்று அவர் மறுத்து விட்டா ...


 Wednesday, April 17, 2019

நான்கெழுத்து நடிகை திரையுலக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சளைக்காமல் நடித்து வருகிறார். புதுசு புதுசாக புதுமுகங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க சம்பளத்தை குறைத்துக் கொள்ள அவர் தயாராகி விட்டார். இந்த நிலையில், அவருக்கு பெற்றோர்கள் திருமண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பட வாய்ப்புகள் வராவிட்டால், திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெற்றோர்களிடம் வாக்குறுதி ...


 Wednesday, April 17, 2019

அந்த மூன்றெழுத்து நடிகர், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார். சமீபகாலமாக இவர் தனக்கு ஜோடியாக, ‘நம்பர்-1’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகிறாராம். உனக்கெல்லாம் ஜோடியாக அந்த நடிகை நடிக்க மாட்டார் என்று சொல்லும் தயாரிப்பாளர்களிடம், பதி நடிகருடன் ஜோடி சேர்ந்த அவர் என்னுட ...


 Wednesday, April 10, 2019

முன்னணி கதாநாயகர்களில், இரண்டெழுத்தில் பெயரை கொண்டவரும் ஒருவர். அவர் நடித்து இம்மாதம் திரைக்கு வர இருந்த படம், தேர்தல் காரணமாக தள்ளிப்போய் விட்டதாம்.படத்தின் தயாரிப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதால், படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த படத்தின் கதாநாயகன்-கதாநாயகி ஆகிய இருவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

...

Top