Cine Gossips

பலவருட போராட்டத்திற்கு பிறகு ரிலீசாகவிருக்கும் பிரபல நடிகரின் படம் !

Tags: Gossips   
Slug: Picture of famous actor to release after many years of struggle

ரொமாண்டிக் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அசுர நடிகரை வைத்து படம் இயக்கினாராம். இந்த படமும் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியதாம். இயக்குனரும் இப்படத்தை திட்டமிட்டபடி எடுத்து முடித்துவிட்டாராம். ஆனால் வெளியீட்டின் போது படம் கடன் பிரச்சனையில் சிக்கியதாம். இதனால் 3 வருடங்களாக படம் ரிலீசாகாமல் உள்ளதாம். சமீபத்தில் இப்படத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, டெப்டம்பர் மாத ரிலீசுக்கு தயாராகி வருவதாக செய்திகள் பரவி வருகிறதாம். இதனை கேட்ட டுவிட்டர் வாசிகள் எந்த வருட டெப்டம்பர் என கேட்டு கிண்டலடித்து வருகிறார்களாம். ஆனால் இதுகுறித்து படக்குழு எந்தவித தகவலும் தெரிவிக்க வில்லையாம்.

sub news
Posted By
anis

Tuesday, August 20, 2019

Other Cine Gossips

 Monday, August 12, 2019

தமிழ்-மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மலையாள வாரிசு நடிகர். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தேசியவிருது நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்தது. முதலில் சம்மதம் தெரிவித்தவர் பின்னர் ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தாராம். ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைப்பதா? அல்லது குறைந்த சம்பளத்துக்கு ச ...


 Saturday, August 10, 2019

இன்னும் மணமகனாக பெரிய மீன் எதுவும் சிக்கவில்லையாம். அருந்ததி நடிகை தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். பெரிய மீன் எப்போது சிக்கி எப்போது திருமணத்தை நடத்துவது என்று பெருமூச்சு விடுகிறார்கள், பெற்றோர்கள். இவருடன் கிசுகிசுக்க பட்ட பாகுபலி நடிகருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதால் சீக்கிரமே இவருக்கும் மாப்பிள்ளை கிடைத்துவிடவேண்டுமென்று அதி தீவிரமாக மாப்பிளை தேடிவருகின்றனர்.


 Wednesday, July 31, 2019

மயூரன் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறாராம். தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் புரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறாராம். கதாநாயகி வராத பட்சத்தில் ...


 Monday, July 29, 2019

தமிழகத்தை சேர்ந்த டீச்சர் நடிகை மலையாள படத்தின் மூலம் பிரபலமானாராம். இவர் தமிழில் ஹோம்லி கேரக்டரில் நடித்த படங்கள் பிளாப் ஆகியதாம். இதையடுத்து கிளாமர் கதைகளுடன் வரும் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களிடம், அவர் 2 நிபந்தனைகளை விதிக்கிறாராம்.“குட்டை பாவாடை அணிந்து நடிக்க மாட்டேன்” என்பது அவரின் முதல் நிபந்தனையாம். “முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்” என்பது இரண்டாவது நிபந்தனைய ...


 Monday, July 29, 2019

அரிச்சுவடி படிப்பின் பெயர் கொண்ட அரசியல் படத்தின் வெற்றி, இதுவரை காமெடியாக கம்பு சுற்றிக் கொண்டிருந்த அப்படத்தின் ஹீரோவான வாயாடி நடிகரை ஏகத்துக்கும் ஏற்றி விட்டிருக்கிறதாம். கதை சொல்ல வருகிறவர்களிடமெல்லாம், ‘காமெடி ரோல்னு சொன்னா காதுலேயே போடுவேன். என்னை ஹீரோவா வெச்சி படமெடுக்கிறதா இருந்தா எடுங்க, இல்லேன்னா நாசமா போங்க’ என்று வாயடிக்கிறாராம். “நீங்கதான் சார் ஹீரோ” என்று க ...


Top