Cine Gossips

இயக்குனருக்கு கிடுக்கிப்பிடி போடும் தயாரிப்பு நிறுவனம்

Tags: Gossips   
Slug: Production company that hinges on the director

எந்த நேரத்தில் அந்த இயக்குனர் அந்த வெளிநாட்டு தயாரிப்பாளருடன்  கூட்டணி அமைத்தாரோ அப்போது பிடித்தது அவருக்கு தலைவலி. சமீபத்தில் இயக்குனர் மற்றும் அந்த பெரிய நடிகர் கூட்டணியில் வெளிவந்த படம் பெரிய அளவில் வசூலை பெற்றதாக தெரிகிறது. ஆனால் விநியோகஸ்தர்கள் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. அந்தப்படம் நடிகருக்கு எந்த பாதிப்பையும் தரவில்லை. ஆனால் இயக்குனர் மீது தான் எக்கச்சக்கமான குற்றங்கள் பதிந்தன. ஒரு இயக்குனருக்கு சுமார் 30 கோடி வரை சம்பளம் தருவதாக என அந்த வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்தையே சுற்றி வளைத்தனர் விநியோகஸ்தர்கள். இதனால் எப்படியாவது தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் இயக்குனர். எப்படியோ அடித்து பிடித்து பெண் இயக்குனரை  வீழ்த்திவிட்டு வெற்றி நடிகர் படத்தை வளைத்துப் போட்டார். ஆனால் தயாரிப்பாளரோ தமிழ் நாட்டில் முக்கிய தயாரிப்பு நிறுவனம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைப்பதில் அவர்கள் கில்லாடி. இருந்தாலும் இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்பு வெளிவந்த படத்தில் இயக்குனருக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஆனால் பெரிய நடிகர் பட சம்பவத்திற்கு பிறகு இயக்குனரை ஒரு வழி பண்ணி விட்டார்களாம் அந்த நிறுவனம். சம்பளத்தை பாதியாக குறைத்து விட்டார்கள். மேலும் படத்தின் பட்ஜெட் இவ்வளவுதான் என்றும், இதற்குள் படம் எடுக்க முடிந்தால் நீங்கள் வெற்றி நடிகரை வைத்து இயக்கலாம் எனவும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இல்லையென்றால் நாங்கள் வேறு இயக்குனரை தேர்வு செய்து கொள்கிறோம் எனக் கூறிவிட்டனர். இதனால் ஆட்டம் கண்டு போன இயக்குனர் எப்படியாவது நடிகரை  வைத்து பெரிய அளவில் வெற்றி கொடுத்து விட வேண்டும் என அவர்களின் கண்டிசன்களுக்கு ஒத்துக்கிட்டாராம் (வேற வழி இல்ல).

sub news
Posted By
anis

Thursday, March 19, 2020

Other Cine Gossips

 Monday, March 16, 2020

முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரை தங்கை வேடத்தில் நடிக்கத் தூண்டியது. இளம் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயினாக நடித்து வந்த நடிகை திடீரென்று இரண்டு படங்களில் தங்கை வேடத்தில் ந ...

Gossips

Read More


 Wednesday, March 4, 2020

அந்த நடிகரின் முக்கிய முடிவுகளை நெருங்கிய நடிகரான   அந்த நண்பன் நடிகர் தான் எடுக்கிறாராம். இதன் காரணமாக அவர் தனது நலம்விரும்பிகளை இழந்து வருகிறார். சமீபத்தில் நடிகரின் நிறுவனம் மூலம் நடத் ...

Gossips

Read More


 Monday, February 24, 2020

முன்னணி சேனல் செய்தி வாசிப்பின் கடைசியில் வரும் வானிலை அறிவிப்பின் மூலமே புகழ் பெற்றவர் அந்த சின்னத்திரை நடிகை. பல வருடங்கள் அந்த பணியை செய்துவிட்டு அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளராக புகழ் பெற்றார் ...

Gossips

Read More


 Monday, February 24, 2020

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் இந்த நடிகர். நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நிறுத்தி நிதானமாக நடித்து வருகிறார். அதனாலேயே ஆமை வேகத்தில் இருக்குற்றது இவரது வளர்ச்சி. இந்நிலையில் நடிகர் தற் ...

Gossips

Read More


 Thursday, February 13, 2020

தனி கட்சி நடத்தும் அந்த நடிகர் கடன் பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறாராம். இருக்கிற கடனை தெரிகிற அளவிற்கு பெரும் தொகை கொடுத்தால் தேசிய கட்சியில் இணைந்து விடும் முடிவில் இருக்கிறாராம். இதனால் பக்கத்து ...

Gossips

Read More


Top