Latest News

16 பாலியல் புரோக்கர்களுக்கு தண்டனை அறிவிப்பு

Tags: # punishment for 16   
Slug: 16

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உட்பட 16 பாலியல் புரோக்கர்களுக்கு கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று தண்டனை விவரங்களை அறிவித்தது. மதபோதகருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயதிலான இரு பள்ளி மாணவிகள் கடந்த 2014 ஜூன் மாதம் காணாமல் போயினர். இது தொடர்பாக  அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து தேடிவந்தனர். இந்நிலையில் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் தொழில் கும்பலின் பிடியிலிருந்து தப்பி அந்த சிறுமிகள் வீடு திரும்பினர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அச்சிறுமிகளிடம் திட்டக்குடி போலீசார் நடத்திய விசாரணையில் இருவரையும் அதே பகுதியில் வசிக்கும் மதபோதகர் அருள்தாஸ், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது. இதேபோல் திட்டக்குடியை சேர்ந்த தனலட்சுமி, விருத்தாசலம் கலா, வடலூர் சதீஷ்குமார், நெல்லிக்குப்பம் ராதா, கோலியனூர் கூட்ரோடு பாத்திமா, சேலம் அன்பு ஆகியோர் இந்த மாணவிகளை விடுதியில் தங்க வைத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஏடிஎஸ்பி லாவண்யா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் இவ்வழக்கில் 16 பேரை குற்றவாளிகள் என கடந்த 4ம் தேதி அறிவித்தார். மேலும், தனித்தனி பிரிவுகளிலும்  தண்டனை அளிக்கப்பட்டு அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். தீர்ப்பை கேட்டதும் தண்டனை பெற்றவர்களும், வெளியே இருந்த அவர்களது உறவினர்களும் கதறி அழுதனர். இந்த தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வபிரியா கூறுகையில், சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது வெட்கப்பட வேண்டிய செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க நீதிபதி லிங்கேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார்.

sub news
Posted By
saran

Tuesday, January 8, 2019

Other Latest News

 Monday, January 7, 2019

சென்னையில் தென்னிந்திய விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பாக ஆண்டுதோறும் புத்தகக்கண்காட்சி நடைபெற்றுவருகிறது. 42 -வது புத்தகக்கண்காட்சியையை தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி ஜனவரி 4 -ஆம் த ...

#books exibition

Read More


 Saturday, January 5, 2019

சமீபத்தில் மும்பையில் தொழிலதிபர் தொழிலதிபர் ஒருவர் தொகுப்பி;தகவல் அட்டை (sim card)  மாற்றும் மோசடியில் தனது 1.86 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இத்தொழிலதிபரின் கணக்கில் இருந்து 28 வெவ்வேறு வ ...

உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாக உள்ளதா?

Read More


 Friday, January 4, 2019

சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கோவை, திருச்சி, ஈரோடு உட்பட13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக மின் உயர் கோபுரங்கள ...

விளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Read More


 Thursday, January 3, 2019

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததன் விளைவாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து கேரளாவில் பதட்டம் நிலவுகிறது இதனைத் தொடர்ந்து அம்மாநில அரசு முழுஅடைப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளது. இதன் விளைவாக தமிழக அர ...

கேரளாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம்; தமிழக அரசு பேருந்துகள் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கம்

Read More


 Wednesday, January 2, 2019

அனைத்து குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு- தமிழக சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் அறிவிப்பு. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் காலை வ ...

governer speech

Read More


Top