Latest News

'90 எம்.எல்' ட்ரெய்லர் சர்ச்சை: ஓவியா விளக்கம்!

Tags: #oviyaa   
Slug: 90 ml trailer oviyaa

சமீபத்தில் வெளியான ‘90 எம்.எல்’ (90 ML) திரைப்படத்தின் ட்ரெய்லர் பலத்த சர்ச்சைக்கு உள்ளான நிலையில், "பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள்" என ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ஓவியா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். படத்தில் ப்யூட்டி பார்லரில் வேலை பார்க்கும் துணிச்சலான ஒரு பெண்ணாக ஓவியா வருகிறார். சிம்பு இசை, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என படக்குழு தொழில்நுட்ப ரீதியில் பலமாக உள்ளது. தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் பெற்ற ‘90 எம்.எல்’ (90 ML) படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. ட்ரெய்லரில் வரும் காட்சிகள், வசனங்கள் முழுக்க ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனம் கொண்டதாகவும் இருப்பதாக தமிழ் சினிமா ஆர்வலர்கள் விமர்சித்ததால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குப் பதில் அளிக்கும் வகையில் ஓவியா தன் ட்விட்டர் பக்கத்தில், ''பழத்தைச் சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். ட்ரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்'' என்று தெரிவித்துள்ளார். ஓவியாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இணையதளவாசிகள்  தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.  

sub news
Posted By
anis

Monday, February 11, 2019

Other Latest News

 Monday, February 11, 2019

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே' படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிர ...

#udhayanidhi

Read More


 Saturday, February 9, 2019

விஸ்வாசம்’ திரைப்படத்துக்கு பிறகு  லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் ‘ஐரா’ ஒரு திகில் திரைப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ‘ஐரா& ...

#Nayanthara

Read More


 Saturday, February 9, 2019

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, தொழில் அதிபர் விசாகனை 2-வது திருமணம் செய்துகொள்கிறார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தின ...

#Soundarya

Read More


 Friday, February 8, 2019

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முட ...

#Duruv

Read More


 Friday, February 8, 2019

சமீபத்தில் தமிழில் 'லட்சுமி' என்ற முழு நடன படம் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து இருந்தார். இந்தியிலும் பிரபுதேவா நடிப்பில் ‘ஏபிசிடி’ என்ற நடன படத்தை பிரபல ட ...

#Prabhudeva

Read More


Top