Latest News

நடிகர் ரித்தீஷ் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம் !

Tags: Rithish   
Slug: Actor rithish is buried in his native village

நடிகரும், முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்தீஷ்(46) நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ரித்தீஷின் உடலுக்கு அமைச்சர் மணிகண்டன், நடிகர் கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பரமக்குடி வட்டம் நயினார்கோவில் அருகே உள்ள சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்த ரித்தீஷின் மனைவி ஜோதி, மகன்கள் ஹாரிக் ரோஷன்(11), ஜெய்ரிக்(9), மகள் தானவி(10) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு ராமநாதபுரம் வந்தனர். அவர்கள் ரித்தீஷின் உடலை பார்த்து கதறி அழுதனர். நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், ராதா ரவி, சின்னி ஜெயந்த், ஆர்.ஜெ.பாலாஜி, ரமணா, மயில்சாமி, சூரி, இயக்குநர் மனோ பாலா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் துணை நடிகர்களும் அஞ்சலி செலுத்தினர். காமெடி நடிகர்கள் போண்டா மணி, விஜய் கணேஷ், சுப்புராஜ் ஆகியோர் ரித்திஷ் உடல் அருகே கதறி அழுதவாறு இருந்தனர். துணை நடிகர் சங்கத் தலைவர் அலாவுதீன் கூறும்போது, நடிகர் சங்கத்துக்காக உழைத்து தற்போதுள்ள சங்க நிர்வாகிகள் வெற்றி பெறப் பாடுபட்டவர் ரித்தீஷ். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் வராதது கண்டிக்கத்தக்கது என்றார்.

sub news
Posted By
anis

Monday, April 15, 2019

Other Latest News

 Monday, April 15, 2019

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் ஆனந்த பாண்டி ஆகியோர் நடித்து திரைக்கு வந்த தாதா 87 படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து இருந்தார். பொதுவாக திருநங்கை வேடங்களில் நடிகர்கள் நடித்த ...

Sri pallavi

Read More


 Monday, April 15, 2019

பிரபு 1982-ல் சங்கிலி படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். தற்போது அவரது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது ...

Prabhu

Read More


 Monday, April 15, 2019

தனது படங்களில் பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பையும் தொடங்கி உள்ளார். இதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்து வருகிறார். இந்த அமைப் ...

Karthi

Read More


 Saturday, April 13, 2019

எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம்
தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது ...

Cheran

Read More


 Saturday, April 13, 2019

கல்லணை கட்டிய கரிகால சோழன் காலத்துக்கு முந்தைய சோழர்கள் வம்சம் நலிந்து பாண்டிய மன்னர்கள் பலம் பெற்று இருந்தனர். பின்னர் அவர்களும் நலிந்த நிலையில் பிற்கால சோழ வம்சம் தலைதூக்கியது. பிற்கால சோழ வம்சத் ...

Sathiyaraj

Read More


Top