Latest News

தனக்கு வழங்கிய தென்னிந்திய விருதை திருப்பியளித்த சேரன் !

Tags: Cheran   
Slug: Cheran return the award

சினிமா துறையில் பிரபலமான எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தென்னிந்திய அளவில் பெரும் சினிமா விருது நிகழ்ச்சியை நடத்தியது. தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய பிராந்தியங்களில் பிரபலமான அந்த நிறுவனம் சேரனுக்கு ‘ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்” என்ற விருதை வழங்கியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சேரன் நடித்து ‘ராஜாவுக்கு செக்’ படம் வெளியானது. இந்த படத்துக்கு அந்த நிறுவனம் தங்கள் வலைதளத்தில் விமர்சனம் எதுவும் எழுதவில்லை. இதுகுறித்து சேரன் கேட்டபோது அந்த படத்தில் அவர்களின் விமர்சன குழுவுக்கு உடன்பாடு இல்லை அதனால் எழுதவில்லை என கூறினார்களாம். இதில் கோபமடைந்த சேரன் என் படத்தில் அப்படி என்ன குறை கண்டீர்கள் உங்கள் விருது எனக்கு வேண்டாம் என திரும்ப கொடுத்திருக்கிறார். இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அவர் தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள்  நான் அல்ல, சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை விமர்சனங்கள் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம் என்னை வீழ்த்தமுடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

sub news
Posted By
anis

Monday, February 3, 2020

Other Latest News

 Wednesday, January 29, 2020

பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். இப்படத்தில் கொடூர வில்லன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து சில படங்களில் வில்லனா ...

Rajendran

Read More


 Tuesday, January 28, 2020

சன் டி.வியில் புதிய சீரியல் ஒன்றைத் தயாரித்து நடிக்கிறார், ராதிகா சரத்குமார். இயக்குநர் சமுத்திரக்கனி எனக்குச் சொல்லிக்கொடுக்கிறார். இருவரும் நீண்ட நாள்களுக்குப் பிறகு சின்னத்திரையில்...' என்று ...

Samuthirakani

Read More


 Saturday, January 25, 2020

இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் புதிய படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. மனோஜ் கிரியேஷன் தயாரிப்பில் இப்படம் வெளியாகவுள்ளது. அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும ...

Bharathiraja

Read More


 Thursday, January 23, 2020

பெரியார் பற்றிய செய்திகளை ரஜினி துக்ளக் விழாவில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட இயக்கங்கள், ரஜினிக்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக போலீஸ் நிலையங ...

Rajini

Read More


 Wednesday, January 22, 2020

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் நரப்பா என்கிற தலைப்பில் வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்க படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரீமேக் என்பதே இருப்பதை அப்படியே காப்பிபடிப்பது என்பதுதான் அர்த்தம் கொள் ...

Dhanush

Read More


Top