Latest News

காரில் குடிபோதையில் சென்று நடிகை பூஜா ஹெக்டே போலீசில் சிக்கினாரா?

Tags: Pooja Hegde   
Slug: Drunk in the car actress pooja hegde

தமிழில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல். மகேஷ்பாபுவுடன் நடித்த மகரிஷி என்ற தெலுங்கு படம் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மகரிஷி படக்குழுவினர் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றனர். அப்போது பூஜா ஹெக்டே அளவுக்கு அதிகமாக மது அருந்தி காரில் சென்றதாகவும் காரை ஓட்டிய டிரைவரும் மதுகுடித்து இருந்ததாகவும் காரை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரின் லைசென்சை ரத்து செய்துவிட்டதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பூஜா ஹெக்டே சார்பில் அவரது மானேஜர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “பூஜா ஹெக்டே பற்றி இணையதளங்களில் வதந்தி பரவி உள்ளது. இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோல் தொடர்ந்து வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

sub news
Posted By
anis

Tuesday, May 14, 2019

Other Latest News

 Monday, May 13, 2019

கீர்த்தி சுரேஷ், பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக ஒரு செய்தி பரவி வைரலானது. இதுகுறித்து விசாரித்தால் தகவல் தவறானது என தெரியவருகிறது. அதாவது கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் பா.ஜ.க-வில் இருக்கிறார். அண்மைய ...

Keerthi Suresh

Read More


 Monday, May 13, 2019

நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. தற்போது தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன. தேர் ...

Vishal

Read More


 Monday, May 13, 2019

தனுஷ் நடிகராகி 17 வருடங்கள் ஆகிறது. 2002-ல் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து முன்னணி நடிகராக உயர்ந்தார். வுண்டர்பார் பட நிறுவனத்தை ...

Dhanush

Read More


 Saturday, May 11, 2019

கமல்ஹாசனின் இந்தியன்-2 படம் தயாராகுமா? என்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சந்தேகங்கள் கிளப்பி வருகிறார்கள். இந்த படத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் சில மாதங்களுக்கு முன்பே தீவிரமாக ஈடுப ...

Indian 2

Read More


 Saturday, May 11, 2019

தமிழ்நாடு முழுவதும் அயோக்யா படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்னால் ரசிகர்கள் விஷால் கட்-அவுட்கள் வைத்து கொடி தோரணங்கள் அமைத்து இருந்தனர். இரு தினங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவுகளும் நடந்தன. நே ...

Vishal

Read More


Top