Latest News
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் படம் ரிலீஸ் ஆகாது- தயாரிப்பாளர் திட்டவட்ட அறிவிப்பு!
Tags: #Duruvதெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை எனவே படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். மேலும் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி வருகிற ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, February 8, 2019
Friday, February 8, 2019
சமீபத்தில் தமிழில் 'லட்சுமி' என்ற முழு நடன படம் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து இருந்தார். இந்தியிலும் பிரபுதேவா நடிப்பில் ‘ஏபிசிடி’ என்ற நடன படத்தை பிரபல ட ...
Friday, February 8, 2019
தமிழில் தோனி, கபாலி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவும் லண்டனை சேர்ந்த இசை கலைஞர் பெனடிக்கும் திருமணம் செய்துகொண்டனர். திருமண வாழ்க்கை குறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வர ...
Thursday, February 7, 2019
‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடித்து வருகிறார் மேகா ஆகாஷ். கவுதம் மேனன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. முதல் படம் ரில ...
Wednesday, February 6, 2019
தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்பாபு.தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருந்தார். இவரும், நடிகை ரமாபிரபாவும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பின்னர் பிர ...
Tuesday, February 5, 2019
ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தேவ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரகுல், கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக கூற ...