Latest News

சினிமாவில் மீண்டும் ஜனகராஜ்...

Tags: Vijay Sethupathi    Prashanth    Janagaraj   
Slug: Janagaraj is back in cinema

நடிகர் ஜனகராஜ் கடந்த 2005ல் பிரசாந்த், சினேகா நடிப்பில் வெளியான "ஆயுதம்" படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நடிக்காமல்  இருந்தார். தற்போது அவரது உடல்நிலை தேறி உள்ளதால் மீண்டும் நடிக்க வருகிறார். சாருஹாசன் தாதா வேடத்தில் நடிக்கும் தாதா 87 படத்திலும், விஜய் சேதுபதியுடன் த்ரிஷா நடிக்கும் 96.படத்திலும், பாண்டியராஜன் மகன் பிருத்விராஜன் நடிக்கும் ஒபாமா படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து பேசி கொண்டிருக்கிறார் என தெரிகிறது.

sub news
Posted By
sumithra

Friday, March 23, 2018

Other Latest News

 Thursday, March 22, 2018

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் சில படங்களில் தலைகாட்டியிருந்தார். அவர் விரைவில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி  உள்ளது. இந்நிலையில் அவர் பெண் வேடத்தில் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

...

 Thursday, March 22, 2018

சென்னையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சேரன் அமீர்,விஷால், ஏ.ர்.முருகதாஸ், ஆர்.கே.செல்வமணி,கே.எஸ் .ரவிக்குமார்,பி.வாசு என பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.

...

 Wednesday, March 21, 2018

நடிகர் ரஜினி இமயமலைக்கு சென்று சென்னை திரும்பி உள்ளார். அவர் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருந்து மருத்துவர்கள் உடல் நலம் சரியாக இருப்பதாக கூறியதால் தற்போது அந்த முடிவை மாற்றிக்  கொண்டு அமெரிக்கா பயணத்தை ரத்து செய்தார். அடுத்த மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் சென்னை அல்லது திருச்சியில் மாநாடு நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவித்து வேகமாக சுற்றுப் பயணத்தை மேற்க ...


 Tuesday, March 20, 2018

நடிகர் அஜித் சினிமாவில் தனி ஆளுமையாக திகழ்பவர். இவர் நடிகர் என்பதை தாண்டி பைக் மற்றும் கார் ரேஸ்களில் ஆர்வம் கொண்டு சர்வதேச அளவில் சில கார்  பந்தய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டி அதற்கு முறையான பயிற்சி எடுத்து வருகிறார். இதை அடுத்து அவர் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகிறது.

...

 Monday, March 19, 2018

நடிகை அனுஷ்கா பெருமை சேர்க்கும் வகையில் பல படங்கள் நடித்து உள்ளார். அதில் பாகுபலி, பாக்மதி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்கள். தற்போது அவர் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.அவர் சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார். " கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் என்னால் ந ...


Top