Latest News

கீர்த்தி சுரேஷ்: சாவித்திரியாக நடிப்பது அதிஷ்டம்....

Tags: Keerthy Suresh    Vijay    Sivakarthikeyan    Surya    Savitri   
Slug: Keerthy suresh savitri acting luck

நடிகை கீர்த்தி சுரேஷ் அதிக படங்களில் நடிக்க  உள்ளார். அவர் சினிமாவிற்கு வந்து சில நாட்களிலேயே முன்னணி நட்சத்திரங்களான விஜய்,சூர்யா,தனுஷ்,சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் சாமி -2 படத்திலும்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அது தவிர விஷாலுடன் சண்டக்கோழி -2 விலும், சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் தயாராகும் நடிகையர் திலகம் படத்திலும், தெலுங்கில் உருவாகும் மகாநதி படத்திலும் சாவித்திரி வேடத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் சினிமா வாழ்க்கை பற்றி சொல்கிறார் "எனது சினிமா பயணம் அற்புதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரே நேரத்தில் உச்சத்துக்கு போக வேண்டும் என்ற எண்ணமும் இல்லை ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு திறமை இருந்தாலும் உழைப்பு இருந்தாலும் கடைசியில் அதிர்ஷ்டம் முக்கியம், அதுதான் இருவரை உயர்த்தும். சினிமாவில் எவ்வளவோ திறமைசாலிகள் ஜொலிக்காமல் போய் விட்டார்கள். அவர்களுக்கு அதிஷ்டம் இல்லாததே காரணம். நான் கிடைக்கிற வாய்ப்புகளை முழு கவனமுடன்  நல்ல படியாக செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறன். கிடைக்கிற கதாபாத்திரத்தில் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களே கிடைக்கின்றன. மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது தற்போது அது சாவித்திரி வேடத்தில் நிறைவேறியது. இந்த படத்தில் நடிப்பதை அதிஷ்டமாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

 

sub news
Posted By
sumithra

Tuesday, March 13, 2018

Other Latest News

 Monday, March 12, 2018

மறந்த நடிகை ஸ்ரீ தேவியின் 16ம் நாள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர்  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி அவரின் க ...

Ajith, Sridevi, Shalini

Read More


 Monday, March 12, 2018

காயத்ரி ரகுராம் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் உள்ளார். இவர் சமூக பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் அவர் என்ன விஷயம் சொன் ...

, Love, Gayathri Raguram, Ashwini, Azhagesan, k.k.nagar

Read More


 Monday, March 12, 2018

நடிகை தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பயிற்சி மையத்தில் ருஷீ என்ற யோகா மாஸ்டரிடம் பயிற்சி எடுத்து வருகிறார். அவர் இதுபற்றி "நான் எப்போதுமே குழந்தைத்தனமாக இருப்பேன். ஆனால் யோ ...

Tamannaah, Rushi, Yoga

Read More


 Friday, March 9, 2018

நடிகை கரீனா கபூர் திருமணத்திற்கு பின்னும் நடிப்பதில் தீவிரம் காட்டிவந்து,கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிப்பில் முழுமையாக களமிறக்கினார். படங் ...

, Kareena Kapoor, Soha Ali Khan, Taimur Ali Khan

Read More


 Friday, March 9, 2018

ரஜினிகாந்த் "காலா" படத்தில் தாதாவாக நடித்ததால் அவருடன் படம் முழுவதும் மணி என்ற நாய் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போது 30 நாய்களை வரவைத்து அதில் மணி என்ற நா ...

Rajini, kaala, Mani, Rasikar

Read More


Top