Latest News

மாஸ் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாலே, ‘மாஸ்’ கதாநாயகி - திரிஷா !

Tags: Trisha   
Slug: Mass heroine trisha

ஏறக்குறைய எல்லா கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து விட்டேன். ரஜினிகாந்துடன் மட்டும் ஜோடி சேரவில்லையே என்ற வருத்தம் இருந்து வந்தது. பேட்ட படத்தின் மூலம் அதுவும் தீர்ந்தது. அவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ‘பேட்ட’ படத்தில் நடிக்க சம்மதித்தேன். அதில், என் கதாபாத்திரம் சின்னதுதான் என்றாலும், மனதில் நிற்கிற மாதிரி ஒரு வேடம். மாஸ் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாலே, மாஸ் கதாநாயகி ஆகிவிடுகிறோம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அது வெற்றி பெறும்போது, பார்க்கலாம். 96 படத்தின் வெற்றியை தொடர்ந்து எனக்கு நிறைய காதல் பட வாய்ப்புகள் வருகின்றன. தினம் இரண்டு மூன்று பேர்களிடம் கதை கேட்டு வருகிறேன். இதுவரை 50 பேர்களிடம் கதை கேட்டு விட்டேன். படம் பார்த்து விட்டு வீடு திரும்பிய பிறகும் கண்ணுக்குள் நிற்குமே அது மாதிரி கதைக்காக காத்திருக்கிறேன்.

sub news
Posted By
anis

Wednesday, April 10, 2019

Other Latest News

 Wednesday, April 10, 2019

கடவுள் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம். கடவுள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை. மதங்கள் பலவாக இருந்தாலும் அவை அனைத்தின் குறிக்கோளும் ஒன்றே. அது மனிதனை மேன்மைப் படுத்துவது. அன்பும், மனித நேயமும் மனிதனை மேன்மைப்படுத்தும். அதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. அந்த போதனைகளை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக சொல்கிறது. அந்த வகையில் இந்து மதம் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர்,  சிவபெருமான், ...


 Tuesday, April 9, 2019

வெள்ளைப் பூக்கள் ஒரு தரமான படம். மகேந்திரனின் உதிரிப்பூக்கள் எப்படி டிரெண்ட் செட்டராக அமைந்ததோ, அதேபோல் தான் வெள்ளைப் பூக்களும் டிரெண்ட் செட்டராக அமையும். இந்த படத்தின் இயக்குனர் விவேக் இளங்கோவனுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நான் காமெடியனாக நடித்த பல படங்கள் பெரிய ஹிட்டாகி இருக்கின்றன. எனது காமெடிக்காகவே ஓடியிருக்கின்றன. ஆனால் ஹீரோவாக நடித்த படங்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்தன. அதை ...


 Tuesday, April 9, 2019

கழுகு படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கிருஷ்ணா. இது குறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கிருஷ்ணா கூறும்போது, ‘நான் நிறைய நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான "High Priestess" என்ற வெப் சீரீஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரி அற்புதமாக வரும் என நானே எதிர்பார்க்கவில்லை. அமலா ...


 Tuesday, April 9, 2019

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா, கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீம், ப ...


 Tuesday, April 9, 2019

ஒரு அடார் லவ்’ படத்தின் பாடல் காட்சியில் கண் சிமிட்டி இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியருக்கு அந்த படம் கைகொடுக்கவில்லை. கண் சிமிட்டல் பிரபலமானதால் பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தி கதையை மாற்ற வைத்தார் என்று படத்தின் இயக்குனர் உமர் லூலூ குறை கூறினார். இதற்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்த பிரியா வாரியர், நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலர் பிரச்ச ...


Top