Latest News

மரக்கன்றுகள் நட நடிகர் கார்த்தி உதவி !

Tags: Karthi   
Slug: Plant the saplings karthi

தனது படங்களில் பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பையும் தொடங்கி உள்ளார். இதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்து வருகிறார். இந்த அமைப்பு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. தற்போது மரக்கன்றுகள் நடும் பணிகளுக்காகவும் உதவி வழங்கி இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியை செய்து வருகிறார். மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கி வருகிறார். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். மரகன்றுகள் நடும் கருணாநிதி பணியை ஊக்குவிக்கும் வகையிலும் அவரது சேவையை பாராட்டியும் நடிகர் கார்த்தி ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். நடிகர் கார்த்தி சமூக நல பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் அகரம் பவுண்டேஷனில் அங்கம் வகிக்கிறார்.

sub news
Posted By
anis

Monday, April 15, 2019

Other Latest News

 Saturday, April 13, 2019

எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம்
தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும். யாரை நம்பி மாற்றம் தேடுவது. சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது.மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், ...


 Saturday, April 13, 2019

கல்லணை கட்டிய கரிகால சோழன் காலத்துக்கு முந்தைய சோழர்கள் வம்சம் நலிந்து பாண்டிய மன்னர்கள் பலம் பெற்று இருந்தனர். பின்னர் அவர்களும் நலிந்த நிலையில் பிற்கால சோழ வம்சம் தலைதூக்கியது. பிற்கால சோழ வம்சத்தின் பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்படுகின்றனர். இந்த பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகி வளர்ந்த நிலையில் இருந்து ராஜராஜ சோழன் முடி சூடுவது வரையிலான கால கட்டத்தில் சோழ ச ...


 Saturday, April 13, 2019

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ஆளப்போறான் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் கூறியதாவது, ஆளப்போறான் தமிழன் பாடலை 10 கோடி பேர் பார்த்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் உணர்வு சார்ந்த பாடல்கள் வெகுவான பார்வையாளர்களை சென்று அடைய வேண்டும். இன அடையாளம் எங்கே தொலைந்து விடுமோ என்ற கருதிய நேரத்தில்தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தி ...


 Friday, April 12, 2019

ஒரு அரசியல் கட்சிக்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்துக்கு மாவட்ட, நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை உருவாக்கி அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் வலுவான அமைப்பாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தனது படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை ரசிகர்கள் பயன் ...


 Thursday, April 11, 2019

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் வித்யா பாலன், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி என்ற படத்தில் நடிப்பதற்கு வித்யா பாலனுக்கு வாய்ப்பு வந்தது ஆனால், இந்தப் படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் படத்தில், அவ ...


Top