Latest News

அரசியலில் அனைத்தும் பணம், உங்களுக்கு அது வேண்டாம் - ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி அட்வைஸ் !

Tags: chiranjeevi   
Slug: Politics is all about money you dont want it rajini and kamal chiranjeevi advise kamal

சிரஞ்சீவி சமீபத்தில் தமிழ் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சினிமா துறையில் நம்பர் ஒன்னாக உள்ளேன். ஆனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அரசியலில் வீழ்ச்சி அடைந்து விட்டேன். இன்று அரசியலில் அனைத்தும் பணம் என்றாகி விட்டது. கோடிக்கணக்கான பணத்தை பயன்படுத்தி எனது சொந்த தொகுதியிலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன். சமீபத்தில் நடந்த தேர்தலில் எனது சகோதரர் பவன் கல்யாணுக்கும் அதே போன்று தான் நடந்தது. ங்கள் அரசியலில் இருக்க நினைத்தால் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் ரஜினியும், கமலும் தொடர்ந்து அரசியலில் இருந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டால், அனைத்து சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்கள் வித்தியாசமான அணுகுமுறையால் அவற்றை கையாள்வார்கள் என நம்புகிறேன். சமீபத்திய லோக்சபா தேர்தலில் கமல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக வெற்றி கிடைக்கவில்லை" என்றார். 2018 ம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியை துவங்கிய கமல், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் களம் இறங்கினார். கமல் போட்டியிடவில்லை என்றாலும், அவரது கட்சி தேர்தலில் போட்டியிட்டது. இருந்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ரஜினி இதுவரை கட்சி துவங்கவும் இல்லை, தேர்தலில் போட்டியிடவும் இல்லை. 2008 ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியை துவங்கிய சிரஞ்சீவி, 2009 ம் ஆண்டு நடந்த தேர்தலில், 294 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் சிரஞ்சீவி, திருப்பதி மற்றும் அவரது சொந்த தொகுதியான பலேகால் தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் திருப்பதியில் வெற்றி பெற்ற சிரஞ்சீவி, தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தார்.

sub news
Posted By
anis

Saturday, September 28, 2019

Other Latest News

 Friday, September 27, 2019

காப்பான் படத்தில் விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் அமைந்ததற்கும், விவசாயிகளுக்குக் குரல் கொடுத்ததற்காகவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளத ...

Surya

Read More


 Friday, September 27, 2019

நடிகர் விஜய் தனது  64-வது திரைப்படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்க்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 3-ந் தேதி தொடங்க ...

Vijay

Read More


 Thursday, September 26, 2019

நடிகர் மாதவன்-சரிதா தம்பதியின் 14 வயது மகன் வேதாந்த். இவர்  நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2-ம் குழு நீச்சல் போட்டியில் 4 x 100 மீட்டர் ரிலேவில் ப்ரீஸ்டை ...

Madhavan

Read More


 Thursday, September 26, 2019

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத ...

Seemaan

Read More


 Thursday, September 26, 2019

ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கோமாளி’ திரைப்படத்தை இந்தி மொழியிலும் எடுக்க உள்ளனர். அண்மையில் வெளியான இந்தப்   படத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட ...

Bonnie kapoor

Read More


Top