Latest News

பிரசாத் ஸ்டூடியோ மேல் இளையராஜா புகார் !

Tags: ilayaraja   
Slug: Prasads studio complains to ilayaraja

இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் இசையமைத்து வருகிறார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல் வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போதைய பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநராக இருந்து அதை நிர்வகித்து வரும் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்த்துக்கு இதில் இணக்கம் இல்லை எனத் தெரிகிறது. நேற்று இளையராஜா தரப்பில் இருந்து அவரது உதவியாளர கஃபார் என்பவரிடம் இருந்து ’இளையராஜா இசையமைக்கும் பகுதியான ஸ்டூடியோ-1இல் சில மேசைகளைப் போட்டு சுமார் 20 கணினிகளை வைத்து வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது இசையமைப்புப் பணிக்கு இடையூறாக உள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஸ்டூடியோவை அத்துமீறிப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறாகக் கணினிகள் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் இசைக்கருவிகள் சேதமாக வாய்ப்புள்ளது’ என விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

sub news
Posted By
anis

Friday, October 4, 2019

Other Latest News

 Friday, October 4, 2019

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது ...

Manirathinam

Read More


 Tuesday, October 1, 2019

நடிகர்  சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசின் சார்பில் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். ...

Prabhu

Read More


 Tuesday, October 1, 2019

தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக வெளிவந்துள்ளன. தற்போது வெப் தொடர்களாகவும் தயாராகின்றன. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர் கவுதம் மேனன் வெப் தொடராக எடுத்து வருகிறார். தற்போத ...

Kamarajar

Read More


 Monday, September 30, 2019

யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் நடித்தவர், கார்த்திக் குமார். இவர், பாடகி சுசித்ராவின் கணவர். நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் இயக்குனர் ஆகியுள்ளார். படத்துக்கு ஜஸ்டிஸ் லீக் என்று பெயர் சூட்டியுள்ளார். இதில் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஊர்வசி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உ ...


 Saturday, September 28, 2019

சிரஞ்சீவி சமீபத்தில் தமிழ் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சினிமா துறையில் நம்பர் ஒன்னாக உள்ளேன். ஆனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அரசியலில் வீழ்ச்சி அடைந்து விட்டேன். இன்று அரசியலில் அனைத்தும் பணம் என்றாகி விட்டது. கோடிக்கணக்கான பணத்தை பயன்படுத்தி எனது சொந்த தொகுதியிலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன். சமீபத்தில் நடந்த தேர்தலில் எனது சகோதரர் பவன் கல்யாணுக்கும் அதே போன்று தான் ...


Top