Latest News

சர்வதேச விருதுகளை அள்ளிக்குவிக்கும் ராட்சசன் !

Tags: Ratsasan   
Slug: Ratsasan wins international awards

முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நார்வேயில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட விருது விழா, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றது. சர்வதேச திரைப்பட இணையதளமான ஐ.எம்.டி.பி (IMDb) 2018-ம் ஆண்டின் சிறந்த படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியப் படங்கள் வரிசையில் ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக 2 தமிழ்ப்படங்கள் இடம்பெற்றன. அதில் ராட்சசனும் ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசன் 4 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ராட்சசன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.

sub news
Posted By
anis

Friday, October 4, 2019

Other Latest News

 Friday, October 4, 2019

இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் இசையமைத்து வருகிறார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல் வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போதைய பிரசா ...

ilayaraja

Read More


 Friday, October 4, 2019

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது ...

Manirathinam

Read More


 Tuesday, October 1, 2019

நடிகர்  சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசின் சார்பில் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். ...

Prabhu

Read More


 Tuesday, October 1, 2019

தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக வெளிவந்துள்ளன. தற்போது வெப் தொடர்களாகவும் தயாராகின்றன. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர் கவுதம் மேனன் வெப் தொடராக எடுத்து வருகிறார். தற்போத ...

Kamarajar

Read More


 Monday, September 30, 2019

யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் நடித்தவர், கார்த்திக் குமார். இவர், பாடகி சுசித்ராவின் கணவர். நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர ...

Karthik

Read More


Top