Latest News

மீண்டும் இணையும் சூரியா ஹரி வெற்றி கூட்டணி

Tags: Surya   
Slug: Reunited suriya hari wins alliance

ஹரி தயார் செய்து வைத்திருக்கும் புதிய கதையை பல முன்னணி நடிகர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் அவர்களின் கால்ஷீட் பிரச்சனையால் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்தது. இதை தெரிந்து கொண்ட நடிகர் சூர்யா உடனடியாக ஹரியை அழைத்து அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு தானே அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். சூர்யா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது நடித்து வரும் சூரரைப் போற்று படத்தை அடுத்து, இயக்குநர் ஹரியின் படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது. இதற்காக அட்வான்ஸ் தொகையையும் ஹரிக்கு கொடுத்துவிட்டார். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர். இரண்டாம் பாகமாக, இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளிவந்த சாமி ஸ்கொயர் திரைப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் இயக்குநர் ஹரி அடுத்ததாக தான் இயக்கும் படம் வெற்றிப்படமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அடுத்த வெற்றிப் படத்திற்காக முழுவீச்சில் கதை விவாதத்தில் ஹரி ஈடுபட்டுள்ளார்.

sub news
Posted By
anis

Monday, August 12, 2019

Other Latest News

 Monday, August 12, 2019

சாட்டை படத்தின் 2-ம் பாகம் ‘அடுத்த சாட்டை’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபு திலக் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ...

Samuthirakani

Read More


 Saturday, August 10, 2019

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் தான் நடிகையர் திலகம். தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. நாக் அஸ்விக் இயக்கிய இந்த படத்தில் சாவித்திரியாக நடித்து அனைவரது மனதையும் ...

Keerthi Suresh

Read More


 Saturday, August 10, 2019

அஜித்குமார்-வித்யாபாலன் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் தயாராகி வெளிவந்துள்ளது. இப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்&rsquo ...

Dhanush

Read More


 Friday, August 9, 2019

பல படங்களில் நாயகனாகவும், முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து வரும் சமுத்திரக்கனி இயக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய சிவம் என்ற ஆன்மிக நாவலை படித்த சமுத ...

Samuthirakani

Read More


 Friday, August 9, 2019

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் படம் ‘தலைவி’. இதில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இப்படத்த ...

Aravindsamy

Read More


Top