Latest News

தமிழக முதல்வரை சந்தித்த​ சரத்குமார் - ராதிகா

Tags: Sarath Kumar    Chief Minister    Tamil Nadu    Radhika   
Slug: Sarath kumar radhika who met the chief minister of tamil nadu

முன்னாள் நடிகர் சங்க தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா நேற்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மகள் ரேயானின் திருமண அழைப்பிதழை முதல்வரிடம் கொடுத்தனர்.
 
தற்போது ரேயான் ராடான் டிவியின் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். ரேயானை திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளை அபிமன்யூ மிதுன் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும் அவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஆண்டு அபிமன்யூ-ரேயானுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

sub news
Posted By
Nihi

Monday, July 11, 2016

Other Latest News

 Saturday, July 9, 2016

சூப்பர் ஸ்டாருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா, தாய்லாந்துக்கு ரஜினி வந்த போது அவரை பற்றி அறிந்த​ தாய்லாந்து இளவரசி. சினிமா நடிப்பைத் தாண்டி ரஜினியின் ஆன்மீக ஈடுபாடு குறித்த செய்தி அவரை கவர ரஜினியை சந்திக்க விரும்பினாராம். இதை அறிந்த கலைப்புலி தாணு வெளிநாட்டில் இருக்கும் ரஜினியிடம் தெரிவித்து சென்னை வருவதற்கு முன் தாய்லாந் ...


 Friday, July 8, 2016

விஷால் நடிகர் சங்க பொறுப்பிலிருந்து பல முடிவுகளை எடுத்துவிட்டார். இந்நிலையில் நடிகர் சங்க கடனை அடைக்க நான், ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக கூறினார்.இந்நிலையில் நடிகர் சங்க கடன் ஏற்கனவே அடைத்து விட்டார். தற்போது மேலும் சில நற்பணிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.

இவர்கள் இணைந்து நடிக்கும் படம் குறித்து விரைவில் தகவல் வரும் என எதிர்பார்கப்படுகிறது.

...

 Tuesday, July 5, 2016

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்சாக்காரன்' திரைப்படம் கடந்த 1971ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக எம்.ஜி.ஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தர் ராஜன், மனோகர், சோ உள்பட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைத்த இந்த படத்தை கிருஷ்ணன் ...


 Monday, July 4, 2016

சென்ற வருடம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் 'பாண்டவர் அணி' அமோக வெற்றி பெற்று, சங்கத்தை நிர்வகித்து வருகிறது.இந்நிலையில் நடிகர் கருணாஸ், துணை தலைவர் பதவியை விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ'வாக அரசியல் வாழ்க்கையை துவங்கியுள்ள அவர், அதில் மட்டுமே இனி கவனம் செலுத்தவுள்ளதால் நடிகர் சங்க பதவியைவிட்டு விலகவுள்ளதாக கூறியுள்ளா ...


 Friday, July 1, 2016

ஜல்லிக்கட்டை ஆதரிக்க தன் கலைத் திறமைகளைச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், தனி ஆல்பங்கள் வெளியிடுவதிலும் வெற்றிகரமாக இயங்கிவரும் ஹிப் ஹாப் தமிழா, ‘‘டக்கரு டக்கரு’ என்ற இசை வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

இந்த 12 நிமிட வீடியோவில், குறும்படம், ஆவணப் படம் மற்றும் இசை ஆல்பம் ஆகிய மூன்று வடிவங்களைக் கலந்து ஜல்லிக்கட ...


Top