Latest News

கடற்கரையில் மீண்டும் சிவாஜியின் சிலையை நிறுவ வேண்டும் - பிரபு தமிழக அரசுக்கு கோரிக்கை !

Tags: Prabhu   
Slug: Shivajis statue to be installed on the beach again prabhu

நடிகர்  சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசின் சார்பில் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். நடிகர் பிரபும் தனது தந்தையும், நடிகருமான சிவாஜி கணேசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, அரசு தரப்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தியதில் பெருமையாகவும், சந்தோசமாகவும் இருக்கிறது. கடற்கரையில் சிவாஜி சிலையை மீண்டும் வைக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறோம். வைப்பார்கள் என்று நம்புகிறோம் என கூறினார். முன்னதாக போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை மெரினா காமராஜர் சாலையில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை தமிழக அரசு அகற்றியது. அகற்றப்பட்ட சிலை சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

sub news
Posted By
anis

Tuesday, October 1, 2019

Other Latest News

 Tuesday, October 1, 2019

தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக வெளிவந்துள்ளன. தற்போது வெப் தொடர்களாகவும் தயாராகின்றன. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர் கவுதம் மேனன் வெப் தொடராக எடுத்து வருகிறார். தற்போத ...

Kamarajar

Read More


 Monday, September 30, 2019

யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் நடித்தவர், கார்த்திக் குமார். இவர், பாடகி சுசித்ராவின் கணவர். நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர ...

Karthik

Read More


 Saturday, September 28, 2019

சிரஞ்சீவி சமீபத்தில் தமிழ் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சினிமா துறையில் நம்பர் ஒன்னாக உள்ளேன். ஆனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அரசியலில் வீழ்ச்சி அடைந்து விட்டேன். இன்று ...

chiranjeevi

Read More


 Friday, September 27, 2019

காப்பான் படத்தில் விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் அமைந்ததற்கும், விவசாயிகளுக்குக் குரல் கொடுத்ததற்காகவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளத ...

Surya

Read More


 Friday, September 27, 2019

நடிகர் விஜய் தனது  64-வது திரைப்படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்க்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 3-ந் தேதி தொடங்க ...

Vijay

Read More


Top