Latest News

திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது

Tags: Manirathinam   
Slug: Treason case against film director mani ratnam

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர். இந்த கடிதத்துக்கு எதிராக பீகாரின் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா  என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அதில், பிரபலங்கள் எழுதிய இந்த கடிதம் தேசத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது. பிரதமர் மோடிக்கு அவதூறு ஏற்படுத்துகிறது. இந்த கடிதம் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானது என சுதிர் குமார் ஓஜா  குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த முசாபர்நகர் தலைமை நீதிபதி சூர்யகாந்த் திவாரி, அனைவரும் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.  இதையடுத்து முசாபர் நகர் போலீசார் திரைப்பட இயக்குநர்  மணிரத்னம் உள்ளிட்ட 50 பேர் மீதும் தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

sub news
Posted By
anis

Friday, October 4, 2019

Other Latest News

 Tuesday, October 1, 2019

நடிகர்  சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசின் சார்பில் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். ...

Prabhu

Read More


 Tuesday, October 1, 2019

தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக வெளிவந்துள்ளன. தற்போது வெப் தொடர்களாகவும் தயாராகின்றன. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர் கவுதம் மேனன் வெப் தொடராக எடுத்து வருகிறார். தற்போத ...

Kamarajar

Read More


 Monday, September 30, 2019

யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் நடித்தவர், கார்த்திக் குமார். இவர், பாடகி சுசித்ராவின் கணவர். நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் இயக்குனர் ஆகியுள்ளார். படத்துக்கு ஜஸ்டிஸ் லீக் என்று பெயர் சூட்டியுள்ளார். இதில் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஊர்வசி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உ ...


 Saturday, September 28, 2019

சிரஞ்சீவி சமீபத்தில் தமிழ் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சினிமா துறையில் நம்பர் ஒன்னாக உள்ளேன். ஆனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அரசியலில் வீழ்ச்சி அடைந்து விட்டேன். இன்று அரசியலில் அனைத்தும் பணம் என்றாகி விட்டது. கோடிக்கணக்கான பணத்தை பயன்படுத்தி எனது சொந்த தொகுதியிலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன். சமீபத்தில் நடந்த தேர்தலில் எனது சகோதரர் பவன் கல்யாணுக்கும் அதே போன்று தான் ...


 Friday, September 27, 2019

காப்பான் படத்தில் விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் அமைந்ததற்கும், விவசாயிகளுக்குக் குரல் கொடுத்ததற்காகவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் காப்பான் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய விவசாய உற்பத்தியில் மண்ணை மலடாக்கும் உரம், பூச்சிக் கொள்ளி மருந்துகள் ...


Top