Latest News
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் ‘மகாவீர் கர்ணா’ தொடக்கம்!
Tags: #vikramஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக இயக்குநர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விக்ரமை கதாநாயகனாக கொண்டு தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் மகாவீர் கர்ணா படத்தை மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இயக்குகிறார், 32-க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது. மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஐதராபாத் ராமோஜி ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஐதராபாத்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
Monday, February 11, 2019
Monday, February 11, 2019
சமீபத்தில் வெளியான ‘90 எம்.எல்’ (90 ML) திரைப்படத்தின் ட்ரெய்லர் பலத்த சர்ச்சைக்கு உள்ளான நிலையில், "பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள்" என ஓவியா தனது ட்விட்ட ...
Monday, February 11, 2019
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே' படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிர ...
Saturday, February 9, 2019
விஸ்வாசம்’ திரைப்படத்துக்கு பிறகு லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் ‘ஐரா’ ஒரு திகில் திரைப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ‘ஐரா& ...
Saturday, February 9, 2019
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, தொழில் அதிபர் விசாகனை 2-வது திருமணம் செய்துகொள்கிறார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தின ...
Friday, February 8, 2019
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முட ...