Latest News

விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் வருகிற 16 - ஆம் தேதி!

Tags: Vishal   
Slug: Vishal aneeshasha

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் வலம் வருகிறார். அவருடைய நண்பன் ஆர்யாவுக்கு திருமண முடிந்தபின்னும், நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகே திருமணம் என்று கூறி வந்தார். இந்நிலையில் நண்பன் ஆர்யாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சாயிஷாவுடன் திருமணம் முடிந்துவிட்டது. மேலும், நடிகர் சங்க கட்டிடமும் முடியும் தருவாயில் உள்ளதால் அவருடைய திருமண பேச்சு மறுபடியும் தலைதூக்கியது. இந்நிலையில் பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். சில மாதங்களாக விஷாலும், அனிஷாவும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்துள்ளனர். இந்தவிஷயத்தை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்திருந்தார். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் வருகிற 16 -ந்தேதி (சனிக்கிழமை) ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. திருமண தேதி பின்னர் முறையாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.

sub news
Posted By
anis

Thursday, March 14, 2019

Other Latest News

 Wednesday, March 13, 2019

பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட் ...

Yash

Read More


 Tuesday, March 12, 2019

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் 'முனி'. அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு 'முனி' படத்தின் இரண்டாவது பாகமாக 'காஞ்சனா' `க ...

Ragava Lawrance

Read More


 Monday, March 11, 2019

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. காதலர் தினத்தில் ஆர்யா “நானு ...

#Arya

Read More


 Saturday, March 9, 2019

கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. தற்போது ‘மாநகரம்’ படம் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார ...

#Karthi

Read More


 Friday, March 8, 2019

அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `நெடுநல்வாடை'. அறிமுக நடிகர்கள் இளங்கோ, அஞ்சலி நாயர் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். `பூ' ராமு, மைம் கோபி ஆகியோர் முக்கிய க ...

#Trailer

Read More


Top