Latest News

நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு - விஜய் சேதுபதி பேட்டி

Tags: Vijay sedhupathy   
Slug: Whom support to the cast union elections vijay sethupathi interview

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைப்பெற உள்ளது. இதில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இதுகுறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஆதரவு குறித்து பின்னர் தெரிவிப்பேன். நடிகர் சங்கத்தில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக முடிந்தால் நன்றாக இருக்கும். சினிமாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் உள்ளனர். அதனால் நல்லபடியாக தேர்தல் நடந்து முடிய வேண்டும். சினிமா தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு, தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகள் வழி வகுக்க வேண்டும். நடிகர் சங்கத்தின் தேர்தலில் போட்டி போடும் இரண்டு அணிகளுமே எனக்கு பழக்கமானவர்கள் தான். இரண்டு அணிகளில், ஒரு அணியினர் மட்டும் என்னிடம் வந்து பேசியுள்ளனர். அவர்கள் சொல்வது நடந்தால் நன்றாக இருக்கிறது. ஆனால், யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்வேன், என விஜய் சேதுபதி கூறினார்.

sub news
Posted By
anis

Wednesday, June 12, 2019

Other Latest News

 Wednesday, June 12, 2019

வடிவேலுவின் அகந்தை பேச்சுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து வெங்கட் பிரபுவும் கண்டனம்
தெரிவித்துள்ளார். எப்போதுமே இயக்குநர் தான் கப்பலின் கேப்டன். ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு, அதுவே நஷ்டம் என்றால், 'டைரக்டர் சொதப்பிட்டான்பா' இது தான் பரவலாகப் பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது ஒரு ஆகச் சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத ...


 Wednesday, June 12, 2019

ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி ‘பன்றிக்கு நன்றி சொல்லி. இத்திரைப்படத்தின் கதைகளம் தமிழ் திரையுலகில் அரிதான புதையல் வேட்டையை மையமாக கொண்டது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை. பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது கு ...


 Tuesday, June 11, 2019

சீயான் என்றால் வயதானவர்களை குறிக்கும் மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது. வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது, வயோதிக பருவத்தில்தான். அப்படி ஒரு தூய்மையான அன்பை அடிப்படையாக வைத்து, ‘சீயான்கள்’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டைரக்டர் வைகறை பாலன். இந்த படத்தில் 70 புதுமுகங்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்து அதன் பிறகே படப் பிடிப்ப ...


 Tuesday, June 11, 2019

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் கிராமப்புற பின்னணியில் தயாராகியுள்ள இந்தப்படத்துக்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன் 10-ம் தேதி) பூஜையுடன் தொடங்கியது. இந்தத் திரைப்படத்திற்கு க/பெ.ரணசிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ...


 Tuesday, June 11, 2019

நடிகர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் கிரிஷ் கர்னாட். 1938ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலன், ரட்சகன், காதல்மன்னன், ஹேராம், செல்லமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். சமூக செயற்பாட்டாளரும் ஆவார். கர்னாடக அரசின் ஞானபீட விருதை பெற்றுள்ளார் கர்னாட். கலைத்துறையில் இவரது ...


Top