MOVIE REVIEW

Natpethunai

Cast Crew

Actor : Hiphop Tamizha Adhi

Actress : Anagha Maruthora

Director : Parthiban Desingu

Producer : Sudhan Sundaram

Story Writer : Devesh Jeyachandran

Music Director : Hiphop Tamizha Adhi

Cinematography : Aravind Singh

பாண்டிச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் எனும் ஹீரோ ஹிப்ஹாப் ஆதி பிரான்சுக்கு போகும் முயற்சியில் இருக்கிறார் அவரது முயற்சிக்கு அவரது அம்மா கௌசல்யா எதிராக இருக்கிறார். இச்சூழலில் பாண்டி ஏரியாவுக்கு பிரான்ஸ் அரசு சுதந்திரம் தருவதற்கு முன்பு பாண்டி காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியில் ஒரு விளையாட்டு திடலை குறிப்பாக ஹாக்கி விளையாட்டு திடலை அரங்கநாதன் ஐயா எனும் தியாகி, ஹாக்கி விளையாடி ஹாக்கியில் ஜெயித்து பிரெஞ்சுக்காரர்களிடமிருநது அந்த ஊர் மக்களுக்கு பெற்றுத் தந்திருக்கிறார். அந்த இடத்தை தனியாருக்கு தாரை வார்க்க, பாண்டி விளையாட்டு துறை அமைச்சர் கரு பழனியப்பன் முயற்சிக்கிறார். அதை தன் விளையாட்டு திறமையால் தடுத்து அரங்கநாதன் ஐயாவுக்கு பிறகு அவர் மாதிரியே ஊர் மக்களுக்கு எப்படி வழங்குகிறார் ஹீரோ ஆதி என்பதும் அந்த ஊரை சேர்ந்த தன் காதலியை எப்படி கரம்பிடிக்கிறார்? என்பதும் தான் " நட்பே துணை" படத்தின் கதையும் களமும்! "நட்பே துணை" படத்தில் மேற்படி, கதையுடன் அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாகவே திகழ மக்கள்தான் காரணம்.... மக்கள் ஓட்டுக்கு காசு வாங்குவதால்தான் அவர்கள் ஊழல்வாதிகளாக திகழ்கிறார்கள் எனும் மெசேஜையும் கலந்துகட்டி கமர்ஷியலாகவும் கலர்ஃபுல்லாகவும் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். சபாஷ்! பிரபாகரன் எனும் பாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி பிரமாதமாக நடித்திருக்கிறார். படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும் அவர் சில இடங்களில் பாடி ஆடிக் கொண்டும் இருக்கிறார். அனகா எனும் புதுமுக நாயகி ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக பக்காவாக நடித்திருக்கிறார். வில்லனாக வரும் கரு பழனியப்பன், விஷயம் தெரிந்த விஷமமான மனிதராக வில்லங்கமான வில்லனாக வித்தியாசம் காட்டியிருக்கிறார். நான் என் முதல் முறை கிடைத்த மந்திரி பதவியிலேயே எனக்கு 100 கோடி, என் மனைவிக்கு 100 கோடி, என் பிள்ளைக்கு 100 கோடி.. என 300 கோடி சம்பாதித்து ஒதுக்கி விட்டேன். இப்போது சம்பாதிப்பதெல்லாம் மக்கள் உங்களுக்கு ஒவ்வொரு முறை தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது... அதற்காக தான் ஓட்டுக்கு பணம் வாங்கும் பொதுமக்கள் தான் எங்களை ஒவ்வொரு முறையும் ஊழல்வாதிகளாகவே வைத்திருக்கின்றனர் என்று கிளைமாக்சில் பேசுவது ஈர்க்கிறது. நட்பே துணை ரசிகனுக்கு பிடித்த நல்ல துணை!

movie review
Posted By
anis

Friday, April 5, 2019

Rating :

Other Movie Reviews

review

 Friday, April 5, 2019

குப்பத்து ராஜா பாபா பாஸ்கர் இயக்கத்தில், சரவணன் சிராஜ், சரவணன் தயாரிப்பில், ஜி. வி. பிரகாஷ் குமார், இராதாகிருஷ்ணன் பார்த்திபன், பூனம் பஜ்வா ஆகியோரின் முன்னணி கதைப்பாத்திர நடிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த ...

Read More


review

 Friday, April 5, 2019

கணவனுக்குத் தெரியாமல் கல்லூரி காலத்து காதலைனை வீட்டிற்கே செக்ஸுக்கு அழைத்து கொலை பாவத்துக்கு ஆளாகும் இளம் பெண், அவரை கொலைப்பழியில் இருந்து மீட்டெடுக்க போராடும் கணவன், பள்ளி இறுதிப் படிப்பு முடிவதற்கு ...

Read More


review

 Friday, April 5, 2019

அருண் விஜய் எழில், கவின் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், எழில் ஒரு சிவில் இன்ஜினியர். சொந்தமாக சைட் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அதே நேரத்தில் கவின் பல திருட்டு வேலைகளை செய்து சம்ப ...

Read More


Top